Posts

𝗞𝗔𝗡𝗡𝗨𝗥 𝗦𝗤𝗨𝗔𝗗 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller film review

Image
  𝗞𝗔𝗡𝗡𝗨𝗥 𝗦𝗤𝗨𝗔𝗗 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller film review  ஒரு மந்திரி வீட்டில் பணம் திருடு போகிறது, இந்த வழக்கை காவல்துறை கதாநாயகன் மற்றும் அவரது அணியிடம் ஒப்படைக்கிறது.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..  தரமான க்ரைம் டிராமா (அ) த்ரில்லர் படம்.. மெதுவாக நகர்ந்தாலும் எங்கேயும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக இருக்கும் படம்.  கிட்டத்தட்ட இது தமிழ் படமான தீரன் மாதிரியான படம் தான், ஆனால் இரண்டும் வேறு வேறு கதைக்களத்தை கொண்ட படம்..  இந்த படத்தில் கிராமத்தில் வரக்கூடிய ஆக்ஷன் காட்சி அட்டகாசமாக இருந்தது..  மம்முட்டி அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது..  த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..   An engaging crime drama film.. Little slow but never felt lag.. Liked it..  That village action scene was epic and dope..  I'd definitely recommend this to watch 𝐖𝐎𝐑𝐓𝐇  𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆 : 𝟖/𝟏𝟎  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐃𝐈𝐒𝐍𝐄𝐘+𝐇𝐎𝐓𝐒𝐓𝐀𝐑

𝗗𝗢𝗡'𝗧 𝗕𝗨𝗬 𝗧𝗛𝗘 𝗦𝗘𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) Korean thriller film review

Image
𝗗𝗢𝗡'𝗧 𝗕𝗨𝗬 𝗧𝗛𝗘 𝗦𝗘𝗟𝗟𝗘𝗥 (𝟮𝟬𝟮𝟯) Korean thriller film review  கதாநாயகி ஒரு வாஷிங் மெஷினை குறிப்பிட்ட ஒரு வெப்சைட்டில் ஆர்டர் செய்கிறார், வீட்டிற்கு வந்த மெஷின் தரமாக இல்லை, இதனால் ஆத்திரமடைந்த கதாநாயகி அந்த மெஷின் உரிமையாளர் மீது புகார் மற்றும் அவதுாறு செய்கிறார், இதனால் அந்த உரிமையாளர் கோபமடைகிறான் , இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..  ஒரு நல்ல பரபரப்பான படம்.. ரொம்ப சாதாரணமான கதை தான் ஆனால் தொய்வில்லாத திரைக்கதை இப்படத்தை ரசிக்க வைக்கிறது..  க்ளைமாக்ஸ் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை மற்ற படி இது ஒரு நல்ல படம்..  த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்..  An engaging thriller about how online forgery becomes personal revenge..  Not a great film but still okay to sit and view..  Watch it if you have lots of time 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄  𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆𝐒 : 𝟕.𝟐/𝟏𝟎  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐀𝐌𝐀𝐙𝐎𝐍 𝐏𝐑𝐈𝐌𝐄  

𝟭𝟮𝗧𝗛 𝗙𝗔𝗜𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Biographical drama film Review

Image
  𝟭𝟮𝗧𝗛 𝗙𝗔𝗜𝗟 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Biographical drama film Review  கதாநாயகன் பொருளாதாரத்தில்  பின்தங்கிய ஒரு நபர்.. பட்டப்படிப்பும் இல்லஇல்லாமல், அவர் எப்படி யூபிஎஸ்ஸி எழுதி தேர்ச்சி பெறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை..   அட்டகாசமான திரைப்படம்.. சொல்லப்போனால் கடந்த ஆண்டின் சிறந்த படமும் இதுதான்..  ஆரம்பம் முதல் இறுதி வரை படம் சுவாரஸ்யமாக இருந்தது.. க்ளைமாக்ஸ் மிக சிறப்பாக இருந்தது..  கதாநாயகன் விக்ராந்த் மஸ்ஸே யின் நடிப்பு மிகப் பிரமாதம்..  இன்றைய கால இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. நீங்கள் செலவு செய்யும் நேரத்திற்கு தகுந்த படம்..  கண்டிப்பாக அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்..  A Fantastic biographical drama that explores about how layman or a poor village students attempting UPSC..  Loved it very much..  Pretty sure you all will love this film..  𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇  𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆 : 𝟗.𝟓/𝟏𝟎  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐃𝐈𝐒𝐍𝐄𝐘+𝐇𝐎𝐓𝐒𝐓𝐀𝐑

𝗖𝗛𝗔𝗥𝗟𝗜𝗘 𝗖𝗛𝗢𝗣𝗥𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Crime thriller series review

Image
  𝗖𝗛𝗔𝗥𝗟𝗜𝗘 𝗖𝗛𝗢𝗣𝗥𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Crime thriller series review    கதாநாயகி ஒரு டிடெக்டிவோட மகள், அவளுக்கும் துப்பறியும் திறன் உள்ளது.. அவள் ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள சிம்லா செல்கிறார், அங்கு அந்த நபர் குடும்பத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார்,  இந்த கொலையை யார் செய்தது என கண்டுபிடிக்க முயல்கிறார் கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை..  ஒரு நல்ல த்ரில்லர் தொடர்.. வு டன் இட் கான்செப்ட்டில் வெளிவந்த தொடர் இது.. திரைக்கதையில் எங்கேயும் தொய்வில்லாமல் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது..  கதாநாயகி வமிகா கப்பி இத்தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கிருக்கிறார்.. அவரது குறும்பு தனமான நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது..  ஒருசில ட்விஸ்டகள் சிறப்பாக இருந்தது..  த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும்..  A who dune it series does have some crazy stuff to view.. WamiQa performance hold this series.. Loved her attitude.. I liked it..  Watch it if you have some time.. Available in Tamil dubbing..  𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄  𝐌𝐘 𝐑𝐀𝐓𝐈𝐍𝐆𝐒 : 𝟕.𝟓/𝟏𝟎  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝐒𝐎𝐍𝐘 𝐋𝐈𝐕

𝗞𝗔𝗔𝗟𝗔 𝗣𝗔𝗔𝗡𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Thriller series Review

Image
 𝗞𝗔𝗔𝗟𝗔 𝗣𝗔𝗔𝗡𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Thriller series Review அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சுற்றுலா செல்லும் ஒரு குடும்பம், அங்கு ஒராக்கா எனும் பழங்குடியினர், திடீரென பரவும் வைரஸ், இதிலிருந்து அந்தமான் மக்கள் தப்பித்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை..  பிரமாதமான தொடர், பார்த்து பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் காட்சிப்படுத்திய விதம் சுவாரஸ்யமாக இருந்தது..  அந்தமான் நிக்கோபார் இவ்வளவு அழகாக காட்சிப்படுத்திய சினிமா என்று எதுவுமில்லை..  கடைசிவரை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் திரைக்கதை உள்ளது..  த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..  A Fantastic series explores about Essence of Andaman Nicobar and oraka tribals.. Very entertaining series.. Loved it.. Waiting for season 2..  I'd definitely recommend this for everyone..  𝐖𝐎𝐑𝐓𝐇+  MY RATING : 8.5/10  SOURCE :𝐍𝐄𝐓𝐅𝐋𝐈𝐗 

𝗚𝗔𝗥𝗨𝗗𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime thriller film review

Image
  𝗚𝗔𝗥𝗨𝗗𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) Malayalam Crime thriller film review  படத்தில் இரண்டு கதாநாயகர்கள், ஒருவர் மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி மற்றொருவர் பண்பான ஆசிரியர், ஒரு நாள் ஒரு பெண் கற்பழித்து சிதைக்கப்பட அதற்கு காரணம் ஆசிரியரான கதாநாயகன் தான் என்று காவல்துறை அதிகாரியான கதாநாயகன் கைது செய்து சிறையில் அடைக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..  அட்டகாசமான க்ரைம் த்ரில்லர்.. இது ஆங்கிலப் படமான த கேல் இன் த ஃபாக் படத்தின் காப்பி என்று சொல்லப்படுகிறது ஆனாலும் இது ஒரு தரமான படம் தான்..  முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என எல்லாம் பக்கமும் சுவாரஸ்யமாக தான் இருந்தது..  பிஜூ மேனன் நடிப்பு அட்டகாசம்.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்..  An Engaging crime thriller with unpredictable twists.. Liked it very much..  Pretty sure you all will like it..  𝐖𝐎𝐑𝐓𝐇  MY RATINGS : 𝟴/𝟭𝟬  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

Image
  𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review  நாலு வேற வேற காலகட்டத்தில் இருக்கும் நான்கு போலிஸார் ஒரே வழக்கை விசாரிக்கின்றனர், இது எப்படி சாத்தியம், இதற்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இத்தொடரின் கதை..  அட்டகாசமான தொடர்.. நெட்பிலிக்ஸிடம் இருந்து டார்க், 1899 க்கு பிறகு வந்துள்ள தரமான அறிவியல் சார்ந்த சீரீஸ்..  ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக வும் சுவாரஸ்யமாகவும் இருந்தது..  சீரீஸின் மேக்கிங் அட்டகாசம்.. எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கூட சிறப்பாக தான் இருந்தது..  எமோசனல் காட்சிகளும் சிறப்பாக இருந்தது..  வில்லன் கதாபாத்திரத்தின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் , சரியான வடிவமைக்கப் படவில்லை என்பதே உண்மை..  சைன்ஸ்பிக்சன்/த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் பிடிக்கும்..  A SciFi series which explores about same crime in 4 different time period.. Such an interesting plot.. Screenplay also very good.. Pretty engaging.. Little confusing concept but presented well..  I'm sure you all will like it.. I'd definitely recommend this to watch