𝙍𝙍𝙍 (2022) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼

 



𝙍𝙍𝙍 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 பிரிட்டிஷ் ஒரு கிராமத்தில் உள்ள பெண்ணை பிடித்திட்டு போக, அப்பெண்ணை காப்பாற்ற போகும் ஒரு கதாநாயகன், அவரை பிடிக்க பிரிட்டிஷால் அனுப்பப்படும் இன்னொரு கதாநாயகன், இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை... இது 1920 காலகட்டத்தில் வாழ்ந்த கொமரம் பீம் மற்றும் அல்லுாரி சீதா ராம ராஜூ அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இரு நபர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களின் பிரிட்டிஷ் க்கு எதிராக போராடியவர்கள், இருவரும் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக போராடினால் எப்படி இருக்கும் என்பதை தான் ராஜமௌலி படமாக எடுத்துள்ளார்..ராஜமௌலி இயக்கத்தில் வந்துள்ள இன்னொரு பிரமாண்ட படம், இந்த முறையும் அவர் வென்று விட்டார்.. பிரமாண்டம் என்பது ஒரு பொருட்டல்ல, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம், உணர்வுப்பூர்வமான காட்சிகளை பிரமாண்டமாக எடுப்பதில் தலைசிறந்த இயக்குனர் ராஜமௌலி..முதல்பாதி அட்டகாசம், இரண்டாம்பாதியும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை, நாட்டுக்கூத்து பாடல் மேக்கிங் மற்றும் நடனம் பிரமாதம்,ரயில் சண்டை, காட்டுக்குள் நடக்கும் யுத்தம் என எல்லா ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக இருந்தது..குறையாக தெரிந்தது கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, இரண்டு கதாநாயகர்கள் கதாப்பாத்திரத்தை தவிர வேறு எந்த கதாப்பாத்திரமும் சரியாக இல்லை, பாகுபலி படத்தில் எல்லா பாத்திரங்களின் பெயர்களும் நினைவில் நிற்கிறது(உதாரணமாக பாகுபலி, தேவசேனா,சிவகாமி தேவி, கட்டப்பா, பல்வால் தேவன்) அந்த விஷயத்தை இப்படத்தில் தவறி விட்டார் ராஜமௌலி..மொத்தத்தில் இது ஒரு தரமான படம் 💥💯 *One more Thunderbuster from Rajamouli sir..Visually stunning & emotionally connected..double hero subject and equal screen space but NTR stole the show (IMO)* [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ]


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review