𝗔𝗬𝗔𝗟𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Revolutionary drama series review
𝗔𝗬𝗔𝗟𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Revolutionary drama series பெண்கள் வயசுக்கு வந்து விட்டால் படிக்க கூடாது, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடோடு இருக்கும் ஒரு கிராமம், அந்த கிராமத்தில் படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படும் கதாநாயகி, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்.. இது போன்ற கதையை எடுத்து படமாக்குவதற்கே தனி தைரியம் வேண்டும், அதை செய்த இந்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.. தரமான கதையாக மட்டும் அல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த தரமான தொடர்.. காட்சிகள் மற்றும் வசனங்கள் மிகவும் வலுவாக இருந்தது.. தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் நடிப்பும் ரொம்ப சிறப்பாக இருந்தது.. விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய தொடர்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.. *Tamil starts with the BEST product of the year.. An amazing revolutionary series with commercial elements.. I'm surprised and everybody will be surprised too..congratulations to the team for giving excellent series.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱
Comments
Post a Comment