Posts

Showing posts from May, 2023

𝗧𝗢𝗢𝗧𝗛 𝗣𝗔𝗥𝗜 : 𝗪𝗛𝗘𝗡 𝗟𝗢𝗩𝗘 𝗕𝗜𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟯-) 𝗛𝗶𝗻𝗱𝗶 𝗙𝗮𝗻𝘁𝗮𝘀𝘆 𝗥𝗼𝗺𝗮𝗻𝘁𝗶𝗰 𝗱𝗿𝗮𝗺𝗮 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝗿𝗲𝘃𝗶𝗲𝘄

Image
  𝗧𝗢𝗢𝗧𝗛 𝗣𝗔𝗥𝗜 : 𝗪𝗛𝗘𝗡 𝗟𝗢𝗩𝗘 𝗕𝗜𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Fantasy Romantic drama series கதாநாயகி ரூமி ஒரு ரத்தக் காட்டேரி, இரவில் மட்டும் வெளியே வந்து மனிதர்கள் ரத்தத்தை குடிக்கும் பெண், அவருக்கு ஒரு பல் டாக்டர் மீது காதல் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. விரசமே இல்லாத ஒரு தரமான சீரிஸ்.. ஹாலிவுட்டில் அதிகம் பார்த்து பழக்கப்படுத்தப்பட்ட கதையாக இருந்தாலும் இது கொஞ்சம் புதுமையாக தான் இருந்தது.. கதாநாயகி மற்றும் அவரது கூட்டத்தை சேர்ந்த சில கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக வரும் ரேவதி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பு நன்றாக இருந்தது.. குறையாக பட்டது கிராபிக்ஸ் சுமார் மற்றும் க்ளைமாக்ஸ் ஒரு குறிப்பிட்ட மார்வெல் படத்தின் அட்டர் காப்பி என்பது குறிப்பிடத்தக்கது.. ஃபேண்டஸி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  Good fantasy drama with plenty of love.. Liked this series..some of the scenes were very good..it has flaws but still okay..I'd definitely suggest to watch.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄 [ MY RATINGS : 𝟳.𝟱

𝗦𝗛𝗔𝗗𝗢𝗪 𝗔𝗡𝗗 𝗕𝗢𝗡𝗘 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) English Fantasy Action drama series review

Image
  𝗦𝗛𝗔𝗗𝗢𝗪 𝗔𝗡𝗗 𝗕𝗢𝗡𝗘 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) English Fantasy Action drama series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் கிரிகன் மீண்டும் உயிரோடு வருவதாக காட்டப்பட்டிருக்கும், இந்த சீசனில் கிரிகன் கிரிஷா மீது தாக்குதல் நடத்துகிறார், இதை கதாநாயகி அலினா மற்றும் அவரது குழுவினர் தடுத்து நிறுத்தினார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான சீரிஸ்.. முதல் சீசன் வேற லெவலில் இருக்கும்.. இந்த சீசனும் நன்றாக தான் இருந்தது.. கிராபிக்ஸ் & ஆர்ட் வேலைப்பாடுகள் அட்டகாசம்.. கேஸ் பிரேக்கர் மற்றும் அவர்களின் குழுவினர்கள் கதாபாத்திர வடிவமைப்பு பிரமாதமாக இருந்தது.. அலினா ஸ்டார்கோவ் தான் கதாநாயகி என்றாலும் அந்த கதாபாத்திரத்தை கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கவில்லை... ஃபேண்டஸி ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு பார்க்கலாம்.. *Superb series.. Worth for long wait.. Kaz brekker & his gang gives me more chills.. Loved them so much.. I'd suggest to watch it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗪𝗥𝗜𝗧𝗘𝗥 𝗣𝗔𝗗𝗠𝗔𝗕𝗛𝗨𝗦𝗛𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) Telugu comedy drama film review

Image
  𝗪𝗥𝗜𝗧𝗘𝗥 𝗣𝗔𝗗𝗠𝗔𝗕𝗛𝗨𝗦𝗛𝗔N (𝟮𝟬𝟮𝟯) Telugu Comedy drama film கதாநாயகன் மிகப்பெரிய ரைட்டர் ஆக வேண்டும் என்று லட்சியத்தோடு திரிகிறார், அதற்காக அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார், ஆனால் அதில் ஒரு புத்தகம் கூட விற்பனை ஆகவில்லை, சில நாட்கள் கழித்து அவர் பெயரில் வேறொருவர் புத்தகம் எழுதி வெளியிடுகிறார், அது பெரிய வெற்றி அடைகிறது, அதை யார் எழுதியது என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.. விரசம் இல்லாத ஒரு நல்ல படம்.. ரசிக்கும் படியான காட்சிகள் நிறைந்த படம் இது.. இவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை சரியாக சொல்லி விட்டனர், ஆனால் நமக்கு தான் நிறைய கேள்வி எழுகிறது..யார் என்று ரிவீல் செய்யும் காட்சி சிறப்பு, ஆனால் ஏன்? இடைவேளை பிரமாதமாக இருந்தது, அதை அப்படியே ஒரு முக்கோண காதல் கதை போன்று எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.. *Good comedy drama.. Romantic portions were awesome 👏really loved this film.this film have some flaws & mistakes but still it's okay.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔

𝗚𝗟𝗢𝗥𝗬 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) Korean revenge thriller series review

Image
  𝗚𝗟𝗢𝗥𝗬 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) Korean Revenge thriller series கதாநாயகி தன் பள்ளிப்பருவத்தில் தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்திய சிலரை பழிவாங்கும் கதைதான் இத்தொடரின் கதை.. இத்தொடரின் முதல் பாகம் வேற லெவலில் இருந்தது.. இந்த பாகமும் நன்றாக தான் உள்ளது.. கதாநாயகியை கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. அந்த கதாபாத்திரம் வலுவாக இருந்ததால்தான் இத்தொடரை மிகவும் ரசிக்க முடிந்தது.. இந்த பாகத்தில் ஒரு சிறிய தொய்வு உள்ளது, காரணம் இந்த கதைக்கு 16 Episode கள் என்பது ரொம்ப அதிகம், ஒருசில Episodeகளை குறைந்திருக்கலாம். ரிவென்ச் த்ரில்லர்/டிராமா ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..   *An amazing revenge thriller with high emotion.. Lead actress character designing and performance was nice👏.. Liked this series.. I'd say go for it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗜𝗡𝗗𝗨 Season 1(𝟮𝟬𝟮𝟭-) Bengali Mystery Drama series

Image
  𝗜𝗡𝗗𝗨 Season 1(𝟮𝟬𝟮𝟭-) Bengali Mystery Drama series கதாநாயகிக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்படுகிறது, ஏற்கனவே ஒரு முறை திருமணம் நிச்சயமாகி சில காரணங்களால் நின்று விடுகிறது, மீண்டும் அதே போல் இந்த முறையும் சில தடங்கல்கள் ஏற்பட, அதற்காக காரணம் என்ன என்பதை கதாநாயகி கண்டுபிடித்தாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.. ஆஹா ஓஹோ என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடர்... கதாநாயகியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. கதை கொஞ்சம் மெதுவாக நகர்வதால் ஆங்காங்கே சிறு தொய்வு ஏற்படுகிறது.. குறிப்பிட்ட ஒரு வீட்டிற்குள்ளேயே கதை நடப்பதாக டிவி சீரியல் போன்ற பிம்பத்தை உண்டாக்குகிறது.. ட்விஸ்ட்களும் பெரிய அளவில் இல்லை.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *Slow burning mystery drama.. No high moments, no terrific twist.. But still interesting.. Lead actress Performance was good 👏 Definitely its 𝐖𝐀𝐓𝐂𝐇𝐀𝐁𝐋𝐄* [ MY RATINGS : 𝟳.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗛𝗢𝗜𝗖𝗛𝗢𝗜

𝗖𝗛𝗢𝗥 𝗡𝗜𝗞𝗔𝗟 𝗞𝗘 𝗕𝗔𝗚𝗛𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Heist thriller film

Image
  𝗖𝗛𝗢𝗥 𝗡𝗜𝗞𝗔𝗟 𝗞𝗘 𝗕𝗛𝗔𝗚𝗔 (𝟮𝟬𝟮𝟯) Hindi Heist thriller film கதாநாயகி ஒரு விமானத்தியில் பணிபுரியும் ஊழியர், அவரும் அவரது காதலனும் சேர்ந்து ஒரு வைரத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகின்றனர், ஆனால் எதிர்பாராத விதமாக அந்த விமானம் தீவிரவாதிகளால் ஹைஜாக் ஆகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. சாமி கௌதமிடம் இருந்து இன்னொரு தரமான த்ரில்லர்.. சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் இருந்தது.. க்ளைமாக்ஸை ஒட்டி வரும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் மிரட்டலாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Superb heist or hijacking thriller..lotta seat edge moments was there..Really enjoyed it.. Twists were good.. I'd say go for it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗛𝗘 𝗟𝗔𝗦𝗧 𝗢𝗙 𝗨𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Survival Thriller Series

Image
  𝗧𝗛𝗘 𝗟𝗔𝗦𝗧 𝗢𝗙 𝗨𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Survival Thriller series கதாநாயகன் தன் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார், அந்த சமயத்தில் உலகம் முழுவதும் ஒரு வைரஸ் பரவி மனிதர்கள் ஜோம்பி யாக மாறுகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஆரம்பம் அட்டகாசமாக இருந்தாலும் போகப் போக சுமாரான தொடராக மாறிவிட்டது.. முதல் நான்கு ஐந்து Episodeகளில் இருந்த பரபரப்பு அதன் பிறகு வந்த Episode களில் கொஞ்சம்கூட இல்லை என்பதுதான் உண்மை.. இது ஒரு கேமில் இருந்து தழுவப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் இது போன்ற கதைகள் உலகம் முழுவதும் நிறைய வந்துள்ளது, இதை எதற்கு கேமில் இருந்து உருவ வேண்டும்?.. எதை காட்டினாலும் பார்ப்போம் என்ற ரசிகர்கள் மட்டும் இதை பார்க்கலாம்.. *An Above average survival thriller with few high emotional moments..leading char performance was good.. It tested my patience..if you have lots of free time, try it, otherwise don't try.. 𝐀𝐍 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄*  [ MY RATINGS : 𝟲.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+