Posts

Showing posts from November, 2022

𝟭𝟴𝟵𝟵 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) German - English SciFi Mystery Thriller Series

Image
  𝟭𝟴𝟵𝟵 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙶𝙴𝚁𝙼𝙰𝙽 - 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 1899 ல் ஒரு கப்பல் நியூயார்க்கிற்கு செல்கிறது, அந்த கப்பலுக்கு சில மாதங்களுக்கு முன் தொலைந்துபோன பிரீமீதியஸே என்ற கப்பலிடம் இருந்து தகவல் வர அதை நோக்கி செல்லும் இந்த கப்பல், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. த்தா வேற மாதிரியான ஒரு தொடர்.. டார்க் சீரிஸ் கிரியேட்டர் என்ற போதே தெரியும் இந்த தொடர் வேற லெவலில் இருக்கும் என்று.. என்னுடைய எதிர்பார்ப்பை விட அதிகமாக பூர்த்தி செய்து விட்டது.. இந்த சீரிஸ் பார்த்து முடித்தவுடன் எப்டிடா இப்டி ஒரு கதையை எழுதினீர்கள் என்று ஆச்சரியமாக இருந்தது..அந்த அளவுக்கு தரமாக இருந்தது..டார்க் அளவிற்கு குழப்பாமல் ஓரளவுக்கு புரியும்படி எடுத்துள்ளனர்.. *Dark series creators are back with mind blowing material.. Seriously you guys are brilliant..1st 3 epis was bit slow for set the mood but Rest everything is 🔥 What a writing! What a char designing 💥 everything is just amazed me.. We demand season 2 immediately coz I've so many

𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) English Horror Slasher Thriller series

Image
  𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 1(𝟮𝟬𝟮𝟭-) English Horror Slasher Thriller Series கதாநாயகன் ஜேக் ஒரு கடையில் இருந்து ச்சக்கி என்ற அமானுஷ்யங்கள் நிறைய ஒரு பொம்மையை வாங்குகிறார், அந்த ச்சக்கி அவரிடம் சென்ற பிறகு அது செய்யும் சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. எந்த ஒரு தொய்வான காட்சிகளும் இல்லாத ஒரு தொடர்.. ச்சக்கி என்ற அந்த பொம்மையின் கதாபாத்திர வடிவமைப்பு அட்டகாசம் 💯 அந்த பொம்மை என்னதான் வில்லத்தனம் செய்தாலும் நமக்கு எந்தவித பயமோ பதட்டமோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை..மாறாக சில சமயங்களில் அதை பார்த்து சிரிப்பு தான் வருகிறது.. பொழுது போகவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Decent adaptation series.. I'm not agree with chucky's half baked ideology, yes he's kinda right, some people just deserve to die but not everyone IMO.. if you have plenty of time then go for it.. 𝐓𝐈𝐌𝐄𝐏𝐀𝐒𝐒 𝐎𝐍𝐄* [ IMDB : 7.3/10 & MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

𝗥𝗢𝗥𝗦𝗖𝗛𝗔𝗖𝗛 (𝟮𝟬𝟮𝟮) Malayalam crime mystery thriller film

Image
  𝗥𝗢𝗥𝗦𝗖𝗛𝗔𝗖𝗛 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Crime Mystery Thriller Film ஒரு மலை கிராமத்திற்கு வரும் கதாநாயகனின் கார் விபத்துக்கு உள்ளாகிறது, கண் விழித்து பார்த்தபின் தான் தெரிகிறது தன் மனைவியை காணவில்லை என்று, காவல்நிலையத்தில் புகார் அளிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு திரைப்படம்.. முதல் பாதி ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. இரண்டாம் பாதியும் நன்றாகத்தான் இருந்தது.. மம்மூட்டி அவர்களின் நடிப்பு வேற லெவல் , அவருக்கு 70+ வயது என்றால் ஒருவரும் நம்பமாட்டார்கள்.. இந்த வயசுல யும் ஃபிட்னஸ் சும்மா தீயா இருக்கு.. இந்த படத்தை இரண்டு வகைக்குள் அடக்கலாம், முதல்பாதி மிஸ்ட்ரி த்ரில்லர் போலவும், 2ம்பாதி ரிவஞ்ச் த்ரில்லர் போலவும் இருந்தது.. படம் தெளிவாக தான் உள்ளது ஆனாலும் ஒருசில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையோ என்று தெரிகிறது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *superb crime mystery thriller.. Loved that damn mammooti character Luke Antony 💥🥵 those supernatural elements are 🔥bit lengthy but it's okay.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.8/10 &

𝗘𝗡𝗢𝗟𝗔 𝗛𝗢𝗟𝗠𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) English Periodic Adventure Drama Film

Image
  𝗘𝗡𝗢𝗟𝗔 𝗛𝗢𝗟𝗠𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) Periodic Adventure Drama Film எனோலா தன் அண்ணனுக்கு போட்டியாக டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கிறார்.. ஒரு கேஸ் கூட வரவில்லை, ஏஜென்சியை இழுத்து மூடும் தருவாயில் ஒரு சிறுமி தன் சகோதரியை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என்று எனோலாவிடம் சொல்கிறார், அங்கிருந்து எனோலா துப்பறிய துவங்குகிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. முதல் பாகமே சுமாரான ஒரு படம் தான், 2வது பாகம் அவசியம்தானா என்ற எண்ணத்துடன் தான் பார்க்க துவங்கினேன் ஆனால் இந்த படம் என்னை ஆச்சரியத்தைப் படுத்தியது.. முதல் பாகத்தை விட இப்படம் மிகவும் சிறப்பாக இருந்தது.. தலைவி மில்லி யை பார்த்து கொண்டே இருக்கலாம் போல, அவ்வளவு அழகு.. ஹென்றி கேவிள் நடிப்பு சிறப்பாக இருந்தது..ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Netflix comes up with a fresh extravaganza.. For me it's far better than first part.. Enola Holmes is just so cute 🥰 whenever twesberky touch her I feel irritated, means I love her..𝐖𝐎𝐑𝐓𝐇* [IMDB : 6.8/

𝗧𝗛𝗘 𝗜𝗡𝗦𝗨𝗟𝗧 (𝟮𝟬𝟭𝟳) Arabic Crime Legal Drama Film

Image
  𝗧𝗛𝗘 𝗜𝗡𝗦𝗨𝗟𝗧 (𝟮𝟬𝟭𝟳) Arabic Crime Drama Film  ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமில்லாத இரண்டு கதாநாயகர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ கருத்து வேறுபாடு சண்டை தான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு படம்.. அரேபிய நாடுகளில் நடக்கும் உள்ளூர் அரசியல் பற்றிய காட்சிகள் நிறைந்த ஒரு படம்.. தொய்வில்லாத திரைக்கதை இப்படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. இரண்டு கதாநாயகர்களின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது.. அதுபோக இரண்டு வக்கீல் கதாபாத்திரம் உள்ளது, அவர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.. டிரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும்,க்ரீன் புக் போன்ற படங்கள் பிடிக்கும் என்றால் இப்படமும் பிடிக்கும்.. *nice courtroom legal drama.. That car repairing scene is just beautiful.. Loved this film.. I'd say go for it.. 𝗪𝗢𝗥𝗧𝗛* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝟮𝟬𝗧𝗛 𝗖𝗘𝗡𝗧𝗨𝗥𝗬 𝗚𝗜𝗥𝗟 (𝟮𝟬𝟮𝟮) Korean Romantic Comedy Drama Film

Image
  𝟮𝟬𝗧𝗛 𝗖𝗘𝗡𝗧𝗨𝗥𝗬 𝗚𝗜𝗥𝗟 (𝟮𝟬𝟮𝟮) KOREAN ROMANTIC COMEDY DRAMA FILM கதாநாயகிக்கு நெருங்கிய தோழி, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார், அதற்கு முன் கதாநாயகியிடம் ஒரு நபரின் பெயரை சொல்லி அவனைப் பற்றிய பற்றிய தகவல்களை சேகரித்து வைக்கும்படி சொல்லிவிட்டு செல்கிறார், தகவல் சேகரிக்கும் வேலையில் கதாநாயகிக்கு அந்த நபரின் நண்பன் மீது காதல் வந்துவிடுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... அழகான ஒரு காதல் திரைப்படம்.. படத்தின் முதல்பாதி மிகவும் கலகலப்பாக இருந்தது.. இரண்டாம் பாதியும் நன்றாகத்தான் இருந்தது ஆனால் கடைசி 30 நிமிடங்கள் சோகங்களை உள்ளடக்கிய பகுதியாக மாறி நம்மை கஷ்டப்படுத்தி விட்டது..கதாநாயகி அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது... ரசிக்கும் படியான காட்சிகள் நிறைந்த ஒரு படம்.. *Beautiful film will love, comedy,strong emotion & Heart broken climax ... I wished they end up together but 💔.. WHY? JUST WHY? If you like emotional romantic comedy drama, then go for it.. 𝗪𝗢𝗥𝗧𝗛* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘