Posts

Showing posts from May, 2022

𝙋𝙊𝙏𝙃𝘼𝙉𝙐𝙍 𝙏𝙃𝘼𝘽𝘼𝙇 𝙉𝙄𝙇𝘼𝙔𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) Tamil robbery suspense thriller film

Image
𝙋𝙊𝙏𝙃𝘼𝙉𝙐𝙍 𝙏𝙃𝘼𝘽𝘼𝙇 𝙉𝙄𝙇𝘼𝙔𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝚁𝙾𝙱𝙱𝙴𝚁𝚈 𝚂𝚄𝚂𝙿𝙴𝙽𝚂𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 போத்தனூர் என்ற ஊரில் உள்ள தபால் நிலையத்தில் பணம் கொள்ளை போகிறது, இதை கதாநாயகன் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான படம்💯 எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து வியந்த ஒரு படம்.. முதல்பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தது ,ஆனால் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்தது.. கதை 70-80 களில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது, அதற்காக மேக்கிங் நன்றாக இருந்தது, குறையாக தெரிந்தது நடிகர்களின் நடிப்பு அந்த அளவுக்கு ஈர்ப்பாக இல்லை..குறைந்த செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் சீரியல் தனமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது.. இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் நன்றாக தான் இருந்தது.. *Surprise unexpected thriller from Aha ott platform.. Really enjoyed it.. Many nostalgic moments also in placed on this film.. Waiting for second part✌* [ MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔 𝗧𝗔𝗠𝗜𝗟

𝙋𝙀𝘼𝙆𝙔 𝘽𝙇𝙄𝙉𝘿𝙀𝙍𝙎 season 6 (2022) British Crime drama series

Image
  𝙋𝙀𝘼𝙆𝙔 𝘽𝙇𝙄𝙉𝘿𝙀𝙍𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟲(𝟮𝟬𝟮𝟮) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝙷𝙸𝚂𝚃𝙾𝚁𝙸𝙲 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 வியாபாரத்தை விரிவுபடுத்த வட அமெரிக்கா வரை செல்லும் தாமஸ் ஷெல்பி , அங்கு சென்று புதிய பிரச்சனை ஒன்றை கொண்டு வருகிறார், அது என்ன பிரச்சனை? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. வெறித்தனம் 😱🥵 கடந்த சீசன்கள் போலவே இதுவும் ஒரு தரமான சீசன்.. நிறைய காட்சிகள் புல்லரிக்க வைத்தது.. குறிப்பாக கடைசி * Episode * வேற லெவல் 💯 வழக்கம்போல் மேக்கிங் தரமாக இருந்தது..கடந்த சீசனோடு ஒப்பிடும்போது கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது,மற்றபடி அட்டகாசமான சீசன்..இதோடு இந்த  அற்புதமான தொடர் முடியப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அடுத்த சீசன் கண்டிப்பாக வேண்டும் என்பது ஒரு ரசிகனாக என்னுடைய கருத்து.. * MASTERPIECE 💥 I loved each and every scene..and I really missed POLLY🥺 seriously we demanding that 7th season.. Please don't drop this epic series🙏🏻 *   [ IMDB RATINGS : 8.8/10 BUT MY RATINGS : 𝟵.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗕𝗕𝗖 𝗜𝗣𝗟𝗔𝗬𝗘𝗥 & 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫 (𝗳𝗿𝗼

𝗧𝗛𝗘 𝗕𝗟𝗨𝗘 𝗘𝗟𝗘𝗣𝗛𝗔𝗡𝗧 (𝟮𝟬𝟭𝟰) Egyptian psychological mystery thriller film

Image
  𝙏𝙃𝙀 𝘽𝙇𝙐𝙀 𝙀𝙇𝙀𝙋𝙃𝘼𝙉𝙏 (𝟮𝟬𝟭𝟰) 𝙴𝙶𝚈𝙿𝚃𝙸𝙰𝙽 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 உளவியல் நிபுணரான கதாநாயகன் ஒரு ஜெயில் கைதிக்கு உளவியல் சிகிச்சை கொடுத்து உண்மையை கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறார், அங்கு சென்று பார்த்தால் அந்த கைதி இவருடன் ஒரு காலத்தில் வேலை பார்த்த நபர், அங்கு இவருக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள் என்னென்ன? என்பதுதான் இப்படத்தின் கதை... தரமான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது, பயங்கரமான கதைக்களம், ஆனால் என்னவென்று சரியாக புரியவில்லை, முதல்பாதி ஓரளவுக்கு புரிந்தது, இரண்டாம் பாதி கொஞ்சம் கூட புரியவில்லை..நான் சரியாக கவனிக்கலயா? இல்ல இந்த படமே அப்படித்தானானு தெரியவில்லை 🤷‍♂️ அதிபுத்திசாலிகள் யாராவது பார்த்து விட்டு விளக்கம் அளியுங்கள்.. * Seems amazing film, outstanding making.. But confusing story telling, yeah I agree psychology thriller always like that but this one is much confusable.. * [ IMDB RATINGS : 8.1/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗟𝗘𝗞𝗛 (𝟮𝟬𝟮𝟮) Punjabi romantic drama film

Image
  𝙇𝙀𝙆𝙃 (𝟮𝟬𝟮𝟮) 𝙿𝚄𝙽𝙹𝙰𝙱𝙸 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 தன் தோழி திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் கதாநாயகி, அங்கு தன் பள்ளிப்பருவ காதலனை காண்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இது * 96 * படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது ஆனால் என்னை பொறுத்தவரையில் இது ரீமேக் படம் கிடையாது, அந்த படத்திலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டுவது இப்படத்தின் இசை, பாடல்கள் மற்றும் காட்சிகள் ஆகும்..இது மூன்றுமே இப்படத்தில் அட்டகாசமாக இருந்தது...வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருக்கிறது, இசையமைப்பாளர் அசத்தியுள்ளார் 💥💯 மனதை நெகிழ வைக்கக்கூடிய அழகான ஒரு காதல் திரைப்படம்... இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எனக்கு திருப்தியாக இல்லை, 96 படத்தில் இருந்த அந்த மேஜிக் இப்படத்தின் க்ளைமாக்ஸில் இல்லை.. எதிர்மறை க்ளைமாக்ஸ் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை 🤷‍♂️ * An amazing heartwarming romantic film 💖 This is not a remake of 96 , we can say it's a inspiration.. WORTH WATCH * [ IMDB : 7.7/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜

𝗦𝗞𝗜𝗡𝗦 Season 1 (2007-) British teen drama series

Image
  𝙎𝙆𝙄𝙉𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟬𝟳-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂  இங்கிலாந்தில் உள்ள ஒரு சில இளம் வயதினரின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி சம்பவங்கள் இத்தொடரின் கதை.. வேற லெவல் சீரிஸ் 💥 நிறைய காமெடி, நிறைய காதல், நிறைய ஆபாசம் என இன்றைய காலத்து இளைஞர்களுக்கு பிடித்தமான அனைத்தும் இத்தொடரில் உள்ளது.. சுவாரஸ்யமான காட்சிகள் இத்தொடரை மெருகேற்றுகிறது.. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது... இத்தொடரின் முதல் சீசனை வைத்து பார்க்கும் போது இந்த தொடர் என்னுடைய ஃபேவரைட் பட்டியலில்  இடம் பெற வாய்ப்புள்ளது..இத்தொடரின் முதல் இரண்டு சீசன் தமிழ் பதிப்பில் உள்ளது, டப்பிங் ஓரளவுக்கு நன்றாக இருந்தது.. * Superb teen series, definitely worth for teenagers and youngsters.. Try if you r 18+ and matured enough.. 🔞🔞🔞 * [ IMDB RATINGS : 8.1/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝐌𝐎𝐎𝐍 𝐊𝐍𝐈𝐆𝐇𝐓 Season 1(2022-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂

Image
  𝙈𝙊𝙊𝙉 𝙆𝙉𝙄𝙂𝙃𝙏 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 மியுசியமில் வேலை செய்யும் ஸ்டீவன் என்பவருக்கு தன் உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லை, இரவானால் தன்னையறியாமல் என்னென்னவோ செய்வதாக நினைக்கிறார், அப்படி அவர் என்ன செய்கிறார்? ஏன்? என்பதுதான் இத்தொடரின் கதை.. மார்வெல் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த தொடர் சூப்பர் ஹீரோ தொடர் என்று விளம்பரப் படுத்தப் பட்டாலும் இது சூப்பர் ஹீரோ தொடர் அல்ல.. இந்த தொடர் பார்க்கும்போது * மம்மி சீரிஸ் ,நேஷனல் ட்ரஷர் * போன்ற புதையல் வேட்டை படங்கள் தான் நினைவுக்கு வந்தது, இதுவும் அது போன்ற கதைதான்.. ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் இடையில் உள்ள காட்சிகள் சற்று தொய்வாக இருந்தது.. ஐந்தாவது * Episode * அட்டகாசம், அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது... சூப்பர் ஹீரோ சீரிஸ் என்று பார்த்தால் சுமாராக தெரியலாம், மற்றபடி ஒரு நல்ல தொடர்.. * Hey Marvel, is this really superhero series? Will it connect with MCU??.. Good treasure hunting fantasy series, I'd say go for it.. Tamil dub is not up to level(IMO) , please do proper du

𝙁𝙄𝙑𝙀 𝙁𝙀𝙀𝙏 𝘼𝙋𝘼𝙍𝙏 (𝟮𝟬𝟭𝟵) English Romantic drama film

Image
  𝙁𝙄𝙑𝙀 𝙁𝙀𝙀𝙏 𝘼𝙋𝘼𝙍𝙏 (𝟮𝟬𝟭𝟵) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 இருதய புற்றுநோய் இருக்ககூடிய கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல் உண்டாகிறது, ஆனால் இவர்கள் அருகருகே நின்றால் கூட இருவருடைய உயிருக்கும் ஆபத்து என்ற நெருக்கடியும் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அற்புதமான ஒரு காதல் திரைப்படம், எந்தவித ஆபாச காட்சிகளும் இல்லாத உன்னதமான காதல் கதை.. இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த * Fault in our stars * படத்தை நினைவு படுத்தியது, அதுவும் இதே போன்ற கதையம்சத்தை கொண்ட படம்தான்.. ஒரு காதல் படத்தின் முக்கிய அம்சம் அந்த படத்தின் இசைதான், அது இந்த படத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது.. மற்ற காதல் படங்களில் இல்லாத சில வித்தியாசமான காட்சிகளும் இப்படத்தில் இருந்தது... இப்படம் பார்பதற்கு நிறைய பொறுமை வேண்டும், அந்த அளவுக்கு மெதுவாக நகரும் படம் இது.. * Beautiful romantic film with slow narration, just few minutes after start to watch the film, I really get into it.. If you like Fault in our stars, Dil bechara or any slow romantic melodrama , t

𝗬𝗘𝗟𝗟𝗢𝗪𝗝𝗔𝗖𝗞𝗘𝗧𝗦 Season 1(2021) English Psychological survival mystery thriller series

Image
  𝙔𝙀𝙇𝙇𝙊𝙒𝙅𝘼𝘾𝙆𝙀𝙏𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1(𝟮𝟬𝟮𝟭) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝚂𝚄𝚁𝚅𝙸𝚅𝙰𝙻 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 எல்லோவ் ஜாக்கெட் என்ற பெண்கள் கால்பந்து அணி செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகி ஆள் அரவமற்ற காட்டில் விழுகிறது, அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை..இந்த தொடர் 25 வருட கால இடைவெளியில் இருவேறு காலக்கட்டத்தில் நடக்கிறது, அட்டகாசமான ஒரு தொடர், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து வியந்த தொடர்... பத்து * Episodes * ஒவ்வொரு * Episode * வும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது, அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொடர் முழுவதும் இருந்தது..எதிர்பாராத நிறைய ட்விஸ்ட்களும் இதில் உள்ளது..ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் வேற லெவல், இருவேறு காலகட்டத்தை முன்னும் பின்னும் அற்புதமாக நகர்த்தி எடிட்டிங் செய்துள்ளனர்..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. இரண்டாவது சீசனுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.. * Fantastic survival mystery thriller series after long time in my list..Superb story telling and

𝘿𝙊𝘾𝙏𝙊𝙍 𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙢𝙪𝙡𝙩𝙞𝙫𝙚𝙧𝙨𝙚 𝙤𝙛 𝙢𝙖𝙙𝙣𝙚𝙨𝙨 (2022) English superhero film

Image
  𝙼𝙰𝚁𝚅𝙴𝙻 𝚂𝚃𝚄𝙳𝙸𝙾𝚂 𝘿𝙊𝘾𝙏𝙊𝙍 𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀 : 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙈𝙪𝙡𝙩𝙞𝙫𝙚𝙧𝙨𝙚 𝙤𝙛 𝙢𝙖𝙙𝙣𝙚𝙨𝙨 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝙿𝙴𝚁𝙷𝙴𝚁𝙾 𝙵𝙸𝙻𝙼  வேறு ஒரு யுனிவர்ஸ்ல் இருக்கும் தன் குழந்தைகளை அடைவதற்காக அமெரிக்கா என்ற பெண்ணின் சக்தியை அபகரிக்க முற்படும் வான்டா, அவரைத் தடுக்க களத்தில் இறங்கும் டாக்டர் ஸ்ட்ரேன்ச், அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இந்த படத்தின் பெயரை * வான்டா - தி மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ் * னு வைத்திருக்கலாம், காரணம் படத்தில் வரும் எல்லா காட்சிகளிலும் அவருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது.. என்னதான் டாக்டர் ஸ்ட்ரேன்ச் மந்திர வித்தை காட்டினாலும் கடைசி வரை வான்டா விடம் அடி உதை தான் வாங்குகிறார், அதனால் அவரை முதன்மை கதாபாத்திரமாக கருத முடியாது...வழக்கம் போல் மார்வெல் கிராபிக்ஸில் மிரட்டியுள்ளனர்... மார்வெல் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்து,ஆனால் மற்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் சுமாராக தெரியலாம்... * Marvel did it again 💥Top class VFX,Superb performance from Benedict Cumberbatch and Elizabeth Olson, Really good one but don't set ext