Posts

Showing posts from October, 2022

𝗕𝗔𝗥𝗕𝗔𝗥𝗜𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮) English Horror Slasher Thriller Film

Image
  𝗕𝗔𝗥𝗕𝗔𝗥𝗜𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮) English Horror Slasher Thriller Film கதாநாயகி ஒரு நாள் மழைக்கால இரவில் வாடகைக்கு வீடு ஒன்றை புக் செய்கிறார், அங்கு சென்ற இவருக்கு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... பரபரப்பான ஹாரர் & ஸ்லாசர் த்ரில்லர் படம்.. கதாநாயகி அவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒரு சில காட்சிகள் மிகவும் திகிலூட்டும் வகையில் இருந்தது.. மேலோட்டமாக இந்த கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் திரைக்கதை அமைத்த விதம் அந்த அளவுக்கு ஈர்ப்பாக இல்லை... எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்பதற்காக விளக்கம் சரியாக இல்லை, கொஞ்சம் வலுவான காரணத்தை சொல்லியிருக்கலாம்.த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. *Interesting core story, decent execution make us to watch but i have some serious doubts with this film..Thriller fans will like it..𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB RATINGS : 7.3/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

𝗧𝗛𝗘 𝗪𝗔𝗧𝗖𝗛𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery Thriller Series

Image
  𝗧𝗛𝗘 𝗪𝗔𝗧𝗖𝗛𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery Thriller Series ஒரு அழகான பங்களா, அங்கு கதாநாயகன் மற்றும் அவரது குடும்பத்தினர் குடி போகின்றனர், அங்கு சென்றவுடன்  அவர்களுக்கு சில மிரட்டல் கடிதங்கள் வருகிறது, இதை யார் செய்கிறது? எதற்காக? அந்த கடிதத்திற்கு பின் உள்ள மர்மங்கள் என்னென்ன? என்பதை கதாநாயகன் தேடி கண்டுபிடித்தாரா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான தொடர்.. ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.. கதையின் ஓட்டத்தில் வரும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் சிறப்பாக இருந்தது.. தலைவி நயோமி வாட்ஸ் அவர்களின் நடிப்பு வேற லெவல்..தலைவிக்கு வயசே ஆகாதா? 😅.. மினி சீரிஸ் என்று சொல்லப்படுகிறது,ஆனால் க்ளைமாக்ஸ் ஒரு முடிவை தரவில்லை,சீசன் 2 வரும் என்று நம்புகிறேன்..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *Gripping and engaging mystery thriller.. Really enjoyed it.. Naomi Watts performance is just pitch perfect as usual..Waiting for Season 2..I'd say  GO for it.. 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛*  [ IMDB RATINGS : 6.6/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗘𝗫𝗧𝗥𝗔𝗢𝗥𝗗𝗜𝗡𝗔𝗥𝗬 𝗔𝗧𝗧𝗢𝗥𝗡𝗘𝗬 𝗪𝗢𝗢 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) Korean Comedy Legal Drama Series

Image
  𝗘𝗫𝗧𝗥𝗔𝗢𝗥𝗗𝗜𝗡𝗔𝗥𝗬 𝗔𝗧𝗧𝗢𝗥𝗡𝗘𝗬 𝗪𝗢𝗢 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙻𝙴𝙶𝙰𝙻 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 மன இறுக்க குறைபாடு உள்ள அதி புத்திசாலியான கதாநாயகி, ஒரு வழியாக சட்டம் படித்து மிகப்பெரிய வக்கீலாகிறார், இவர் எப்படி வழக்குகளை வாதாடி வெற்றி பெறுகிறார்? என்பதுதான் இத்தொடரின் கதை.. கொரியன் டிராமா என்றால் அதை ஒரு ஜோனரில் அடக்க முடியாது, அதற்குள் எல்லாமே இருக்கும்.. காதல்,காமெடி,நட்பு,குடும்பம்,க்ரைம் என எல்லாம்.. இந்த தொடரிலும் அது எல்லாம் இருக்கிறது.. அட்டகாசமான தொடர்.. மகிழ்ச்சியை தரக்கூடிய அற்புதமான தொடர்.. கதாநாயகி அவர்களின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. அவர் கொடுக்கும் சின்ன சின்ன பாவனைகள், பேசும் விதம், உடல் மொழி எல்லாம் மிகவும் ரசிக்க வைத்தது.. மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக தான் இருந்தது.. நான் கண்ட சிறந்த கொரியன் தொடர்களில் இதுவும் ஒன்று.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Beautiful Kdrama.. Loved each and every scene.. Damn that lead actress performance 💥 Fell in love her after seeing this series, seriously amazing actress,

𝗟𝗜𝗠𝗕𝗢 (𝟮𝟬𝟮𝟭) Hongkong Crime Thriller Film

Image
  𝗟𝗜𝗠𝗕𝗢 (𝟮𝟬𝟮𝟭) 𝙷𝙾𝙽𝙶𝙺𝙾𝙽𝙶 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு சைக்கோ கொலைகாரனால் வரிசைக்கு கடத்தி கொல்லப் படும் இளம்பெண்கள், இந்த சைக்கோ கொலைகாரனை காவல்துறை அதிகாரியான நம் கதாநாயகர்கள் கண்டுபிடித்தார்களா? என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான க்ரைம் த்ரில்லர் படம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருந்தது.. படத்தில் இரண்டு கதாநாயகர்கள், அவர்கள் இருவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அதோடு ஒரு பெண் கதாபாத்திரம் படம் முழுவதும் வரும், அவர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.. இது சமகாலத்தில் நடக்கக்கூடிய கதைதான் ஆனால் மொத்த படமும் கருப்பு வெள்ளை படமாக இருந்தது, அது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.. ஒருவேளை படம் ராவாக இருக்கட்டும் என்பதற்காக கூட இருக்கலாம்.. க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *Superb crime thriller..engaging screenplay makes us sit to watch.. Lots of sexual and violencive content is there, so definitely can't watch with family 🔞🔞... 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB RATINGS : 7.1/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑

𝗟𝗜𝗚𝗛𝗧𝗜𝗡𝗚 𝗨𝗣 𝗧𝗛𝗘 𝗦𝗧𝗔𝗥𝗦 (𝟮𝟬𝟮𝟭) Chinese Comedy Feel Good Drama Film

Image
  𝗟𝗜𝗚𝗛𝗧𝗜𝗡𝗚 𝗨𝗣 𝗧𝗛𝗘 𝗦𝗧𝗔𝗥𝗦 (𝟮𝟬𝟮𝟮) 𝙲𝙷𝙸𝙽𝙴𝚂𝙴 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙴𝙴𝙻 𝙶𝙾𝙾𝙳 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 கதாநாயகன் சிறிய கடை ஒன்றை வைத்துள்ளார், அவருடன் இரண்டு நபர்கள் வேலை செய்கின்றனர், ஒரு நாள் பக்கத்து வீட்டு தம்பதி தன்னுடைய மகளை ஒரு இரண்டு நாள் பார்த்து கொள்ளுங்கள் என்று இவரிடம் விட்டு செல்கின்றனர், அந்த சிறுமி, அவர்களுடன் சென்ற பின் என்ன நடந்தது, அவர்களுக்கு இடையேயான பாசப் போராட்டம் தான் இப்படத்தின் கதை.. அற்புதமான மனதை நெகிழ வைக்கக்கூடிய ஒரு படம்.. காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த படம் இது..  4 முதன்மைக் கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது, குறிப்பாக கதாநாயகன் மற்றும் அந்த சிறுமியின் நடிப்பு அட்டகாசம் 💯 அவர்கள் இருவருக்குமான காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.. படத்தின் கடைசி 10 நிமிடங்கள் கண்களில் நீரையும் முகத்தில் புன்னகையையும் வரவைக்கிறது.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.. *What a beautiful film yaar! It makes me cry & laugh..Loved it.. This film is definitely one of best of the year & one of the best ever in

𝗦𝗢𝗨𝗡𝗗𝗧𝗥𝗔𝗖𝗞 #𝟭 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic Drama Series

Image
  𝗦𝗢𝗨𝗡𝗗𝗧𝗥𝗔𝗖𝗞 #𝟭 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟭-) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருமே சிறு வயதிலிருந்தே நண்பர்கள், கதாநாயகிக்கு பாடல் வரிகள் எழுதுவதற்கு உதவி தேவைப்படுகிறது, இதன் காரணமாக இருவரும் ஒரே வீட்டில் இனைந்து தங்க நேரிடுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அழகான காதல் கதை.. கொரியன் தொடர் என்றாலே குறைந்து 16 Episode கள் வரை இருக்கும் ஆனால் இந்த தொடரில் வெறும் 4 Episode கள் மட்டும்தான், இதுவே மிகப்பெரிய ஆச்சரியம் தான்.. தொடரில் 90% கதாநாயகன் & கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இருக்கும், இருவரும் பிரமாதமாக நடித்துள்ளனர்.. மனதை வருட கூடிய இசையும் இத்தொடரில் உள்ளது.. கொரியன் ரொமான்டிக் தொடர்கள் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Beautiful Kdrama.. It has love, friendship & emotions..Also it has some hidden layer narrations & I noticed it 😅. some of the dialogues are tried to be convey in poetic, it was nice.. Really loved this one..𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛* [ IMDB R

𝗘𝗠𝗘𝗥𝗚𝗘𝗡𝗖𝗬 𝗗𝗘𝗖𝗟𝗔𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟭) Korean Action Thriller Film

Image
  𝗘𝗠𝗘𝗥𝗚𝗘𝗡𝗖𝗬 𝗗𝗘𝗖𝗟𝗔𝗥𝗔𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟭) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒரு மிகப்பெரிய விமானத்தில் ஒருவர் வைரஸை பரப்பப் போவதாக கதாநாயகனுக்கு தகவல் கிடைக்கிறது, இதை வைத்து கதாநாயகன் அந்த வைரஸை தடுத்து நிறுத்தினாரா மற்றும் அதன் விமானத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இது போன்ற கதை கொண்ட படங்களை நிறைய கண்டிருக்கிறோம், உதாரணமாக லியாம் நீசனின் நான் ஸ்டாப், கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் சுல்லி மற்றும் பல.. அதே போன்ற படம் தான் ஆனால் இப்படம் என்னை மிகவும் கவர காரணம் இப்படத்தின் தரமான திரைக்கதை தான்.. வேற லெவலில் இருந்தது.. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் படு வேகத்தில் ஓடி முடிகிறது.. கடைசி அரைமணிநேரம் பதைபதைப்பு + புல்லரிப்பு இரண்டு உணர்வையும் சேர்த்துக் கொடுத்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் இது.. *Lots of Hollywood reference but still it's a Fantastic flight Highjack thriller film.. Really loved it.. There is lot of goosebumps moments in this film..Climax is too amazing..Don't miss it..WORTH WATCH* [ IMDB

𝟰𝗕𝗜𝗔 (𝟮𝟬𝟬𝟴) Thai Anthology Horror Thriller Film

Image
  𝟰𝗕𝗜𝗔 (𝟮𝟬𝟬𝟴) 𝚃𝙷𝙰𝙸 𝙰𝙽𝚃𝙷𝙾𝙻𝙾𝙶𝚈 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 4 அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த தனித்தனி கதை தான் இப்படம்.. சிறப்பான ஒரு ஆந்தாலஜி பேய் படம்.. பயம், பதட்டம் ஏதும் பெரிய அளவில் இருக்காது, ஆனாலும் நல்ல படம் தான்.. 4 கதைகளில் யில் எனக்கு பிடித்தது முதல் மற்றும் மூன்றாவது கதை தான், இந்த 4 கதைகளில் ஒரு கதையின் இயக்குனர் இதற்கு முன் எடுத்த சட்டர் என்ற படம் வேற லெவலில் இருக்கும், அல்லு விட்டுரும்..அதிகம் பேய் படங்கள் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.. மற்ற ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.. *Four different stories about fear..A Neat (decent) horror come slasher thriller.. I love the cinematography in second one..🔞🔞 VFX could have been better.. ONE TIME WATCHABLE* [ IMDB RATINGS : 6.6/10 & MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫