Posts

Showing posts from December, 2022

𝗚𝗟𝗔𝗦𝗦 𝗢𝗡𝗜𝗢𝗡 - 𝗞𝗡𝗜𝗩𝗘𝗦 𝗢𝗨𝗧 𝗠𝗬𝗦𝗧𝗘𝗥𝗬 (𝟮𝟬𝟮𝟮) English Suspense thriller film

Image
  𝗚𝗟𝗔𝗦𝗦 𝗢𝗡𝗜𝗢𝗡 - 𝗔 𝗞𝗡𝗜𝗩𝗘𝗦 𝗢𝗨𝗧 𝗠𝗬𝗦𝗧𝗘𝗥𝗬 (𝟮𝟬𝟮𝟮) English Suspense Thriller film க்ளாஸ் ஆனியன் என்ற ஒரு தீவில் ஒரு கேம் விளையாடலாம் என்று மைல்ஸ் என்பவர் தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார், அங்கு சென்ற இவர்களில் ஒருவர் கொல்லப்பட, அந்த கொலையை யார் செய்தது என்பதை கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை..  இது க்னைவ்ஸ் படத்தின் இரண்டாம் பாகமாகும், முதல் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும்.. இந்த பாகமும் நன்றாகத்தான் இருக்கிறது.. முதல் அரைமணிநேரம் கதை Self எடுக்கவே இல்லை, அந்த கொலை நடந்த அடுத்த நிமிடத்திலிருந்து படம் சுவாரஸ்யமாக இருந்தது.. முதல் அரை மணிநேரத்தில் என்ன நடந்தது என்பதை பிறகு விளக்கும் காட்சிகள் தரம்.. ஆனாலும் அந்த ட்விஸ்ட் கிட்டத்தட்ட கணிக்கும்படி தான் இருந்தது.. இந்த படத்தின் குறையாக எனக்கு தெரிந்தது முதல் பாகத்தில் தலைவி அனா டி அர்மாஸ் நடித்திருப்பார், அவர் இந்த படத்தில் இல்லை என்பது என்னை கவலை அடைய செய்தது.. மர்டர் மிஸ்ட்ரி, ஹூடனிக் கான்செப்ட், த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Solid & Neat second installment

𝗔 𝗠𝗔𝗡 𝗢𝗙 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟮) Spanish Heist drama film

Image
  𝗔 𝗠𝗔𝗡 𝗢𝗙 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 (𝟮𝟬𝟮𝟮) Spanish Heist Drama film வங்கியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கதாநாயகன், தொடர்ச்சியாக பல வங்கிகளை கொள்ளையடிக்கிறார், காவல்துறை இவரை பிடிக்க மும்முரம் காட்டுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..  ஒரு நல்ல ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம், படம் கொஞ்சம் மெதுவாக நகரும் ஆனால் எந்த இடத்திலும் தொய்வாக இருக்காது.. கள்ள நோட்டு அச்சடிக்கும் காட்சிகள் மற்றும் ச்செக் வச்சு ஏமாற்றும் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது.. இது என்னதான் ஹெய்ஸ்ட் படமாக இருந்தாலும் இதன் உண்மையான கதைக்களமே வேறாகும்.. எதுக்கும் இந்த படத்தை பார்த்து வைத்து கொள்ளுங்கள், பின்னாடி ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம் வருகிறது, காப்பி அடித்திருந்தால் கண்டுபிடிக்க உதவும் 🤪... *A neat heist drama, actually its kinda political revolutionary drama.. Watch it if you have plenty of time.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB : 6.3/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 season 1(𝟮𝟬𝟭𝟯-) English Action crime thriller series

Image
  𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 season 1 (𝟮𝟬𝟭𝟯-) English Action Crime thriller series கதாநாயகன் 15 வருடங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வருகிறார், வெளிவந்தவுடன் பான்ஷி என்ற ஒரு சிறு நகரத்திற்கு செல்கிறார், அங்கு புதிதாக பதவியேற்க இருக்கும் ஷெரீப் ஒருவரை கொன்றுவிட்டு இவர் ஷெரீப் ஆக மாறுகிறார்..இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு ஆக்சன் த்ரில்லர் த்ரில்லர்.. ஆக்சன் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருந்தது.. ரொம்ப பரபரப்பான ஒரு சீரிஸ்.. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, கதாநாயகன் லூகாஸ் ஹூட் மற்றும் சுகர் & ப்ராக்டர் போன்ற கதாபாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.. நிறைய ஆபாச மற்றும் வன்முறை காட்சிகள் உள்ளது, அதை தவிர்த்திட்டு ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்... *Fantastic action thriller series.. Top class char designing + racy screenplay + rawness makes this one a masterpiece..and this has heavy adult🔞 & violence content, consider it before watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 8.6/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ]

𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗛𝗘𝗬 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy drama film

Image
  𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗝𝗔𝗬𝗔 𝗛𝗘𝗬 (𝟮𝟬𝟮𝟮-) Malayalam Comedy drama film சிறுவயதில் இருந்தே தன்னுடைய உரிமைகள் எதுவும் முறையாக கிடைக்காமல் ஒடுக்கப்பட்டு வாழும் கதாநாயகிக்கு ஒருவருடன் திருமணம் ஆகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு படம்.. முதல் அரைமணிநேரம் கதை கொஞ்சம் சீரியஸாக இருந்தது, அதன் பிறகு படம் முழுக்க செம்ம காமெடி தான்.. நிறைய காட்சிகள் சிரிப்பை வர வைத்தது, குறிப்பாக கதாநாயகி மற்றும் கதாநாயகனுக்கு இடையிலான சண்டைக் காட்சிகள் வேற லெவல் 😂🤣 என்னதான் ஒரு புறம் இப்படம் காமெடியாக  இருந்தாலும் மிக அவசியமான ஒரு கருத்தையும் இப்படம் பதிவு செய்கிறது.. கதாநாயகி அவர்களின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. பெண்ணுரிமை பேசக் கூட ஒரு நல்ல படம்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்..  *This film is absolutely gem 💎.. Very hilarious 😂.. Laughed out loud in many scenes.. I would definitely recommend this film..pretty sure you all will like this film.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB : 8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢

𝗧𝗛𝗘 𝗪𝗛𝗜𝗧𝗘 𝗟𝗢𝗧𝗨𝗦 season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Comedy drama series

Image
𝗧𝗛𝗘 𝗪𝗛𝗜𝗧𝗘 𝗟𝗢𝗧𝗨𝗦 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Comedy Drama series இத்தாலியில் உள்ள மிகப்பெரிய ஒரு ஹோட்டல், அங்கு வரக்கூடிய விருந்தினர்கள், அவர்களுக்கு அங்கு நடக்கும் தினசரி சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்.. முதல் சீசன் வேற லெவலில் இருக்கும், இந்த சீசனும் எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக இருந்தது.. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.. இத்தாலியில் உள்ள அந்த ஹோட்டலுக்கே சென்று வந்த உணர்வை இத்தொடர் கொடுத்தது.. இது ஒரு காமெடி சீரீஸ் தான் ஆனால் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. முதல் மற்றும் இரண்டாம் சீசனின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் எல்லாம் வேறு வேறு, அதனால் எந்த சீசனை வேண்டுமானாலும் முதலில் பார்க்கலாம்... ஜனரஞ்சகமான தொடர், கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்..  *Beautiful series with plenty of characters.. Probably the best one from HBO max..Loved every episode.. You can watch this in vise versa..and it's 🔞🔞..season 3 already renewed and madly waiting for that too.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.8/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ]

𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English slasher thriller series

Image
  𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Slasher Thriller series கடந்த சீசனின் இறுதியில் ச்சக்கி தனது ஆத்மாவை நிறைய பொம்மைக்குள் செலுத்தி விடும், ச்சக்கி செய்த கொலைகளை ஜேக்,டேவன், லெக்ஸி தான் செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு கத்தோலிக் தேவாலயத்திற்கு அனுப்பப் படுகிறார்கள், ச்சக்கி மீண்டும் அவர்களைத் தேடி அங்கே செல்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... சுமாரான ஒரு சீசன்.. முதல் சீசனே ஓரளவுக்கு தான் நன்றாக இருக்கும், இது அதைவிட மட்டமாக இருக்கிறது... கதை என்று ஒன்றை எழுதி எடுத்திருக்க வேண்டும், சும்மா கத்தி, ரத்தம் னு காட்டினாலாம் ரசனையாக இருக்காது... குட் ச்சக்கி சார்ந்த பகுதிகள் மட்டும் கொஞ்சம் ரசிக்கும் வகையில் இருந்தது, மற்றபடி சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை, குறிப்பாக டிஃபனி வருகிற காட்சி யெல்லாம் ரொம்ப மட்டமாக இருந்தது..அடுத்த சீசனுக்கு லீடு வேற கொடுத்துள்ளார்கள், இத்தோடு நிறுத்திக் கொண்டால் நல்லது... *Disappointed season from Chucky series, I guessed it'd be bad and I'm right.. Hope they won't renew next installment for this shit.. 𝐀𝐕𝐄

𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) English Action Thriller series

Image
  𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) English Action thriller series சான் பிரான்சிஸ்கோவில் சைனா டவுன் என்ற சிறிய நகரத்தில் உள்ள ஹாப் வை மற்றும் லியான் ஸி என்ற இரு கேங்ஸ்டர் குழுவுக்குள் நடக்கும் யுத்தம் தான் இந்த தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு ஆக்சன் தொடர்.. ஒவ்வொரு Episodeவும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.. சண்டைக் காட்சிகள் வேற லெவலில் இருந்தது.. கதாநாயகன் அஸாம் மற்றும் யங் ஜூன் இடையிலான காட்சிகள் மிகவும் சிறப்பு.. இந்த சீரீஸை இங்கே ரீமேக் செய்யலாம், ஒரு மாஸ் ஹீரோ படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இத்தொடரில் உள்ளது.. ஆக்சன் த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தொடர் பிடிக்கும்.. *Fantastic Action thriller series.. Stunt sequences are mind blowing.. Each and every char playing a vital role.. Ah sahm & Penelope blacke 💖 Loved this series very much.and it's 🔞🔞...𝐖𝐎𝐑𝐓𝐇 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB RATINGS : 8.4/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

𝗞𝗛𝗔𝗞𝗘𝗘 : 𝗧𝗛𝗘 𝗕𝗜𝗛𝗔𝗥 𝗖𝗛𝗔𝗣𝗧𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) Hindi crime thriller series

Image
  𝗞𝗛𝗔𝗞𝗘𝗘 : 𝗧𝗛𝗘 𝗕𝗜𝗛𝗔𝗥 𝗖𝗛𝗔𝗣𝗧𝗘𝗥 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) HINDI CRIME THRILLER SERIES  நேர்மையான காவல்துறை அதிகாரியான கதாநாயகன் அமித் லோதா பீகார் மாநிலத்திற்கு பணி நியமனம் செய்யப்படுகிறார், அதே வேளையில் பீகாரில் சந்தன் மாத்தோ என்ற ஒருவன் மிகப்பெரிய ரௌடியாக உருவெடுக்கிறான், இவர்கள் இருவருக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இத்தொடரின் கதை..  இத்தொடர் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.. அட்டகாசமான ஒரு தொடர்.. காட்சிக்கு காட்சி தொய்வில்லாத பரபரப்பான தொடர்.. இத்தொடரின் இயக்குனரான நீரஜ் பான்டே இதற்கு முன் *Wednesday, Special 26 , MS Dhoni the untold story* போன்ற தரமான படங்களை இயக்கியுள்ளார், அந்த வரிசையில் இதுவும் ஒரு தரமான படைப்பு தான்.. அமித் லோதா மற்றும் சந்தன் மாத்தோ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..*Superb crime thriller.. You can't expect any twist & turns but this one will hold u until the end.. Well written screenplay & neat execution 💯 last 3

𝗠𝗔𝗥𝗦𝗛𝗟𝗔𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟰) Spanish Crime investigation thriller Film

Image
  𝗠𝗔𝗥𝗦𝗛𝗟𝗔𝗡𝗗 (𝟮𝟬𝟭𝟰) SPANISH CRIME INVESTIGATION THRILLER ஒரு சிறிய நகரத்தில் வரிசைக்கு கடத்தி கொல்லப்படும் இளம்பெண்கள்.. இந்த வழக்கை கையில் எடுக்கும் படத்தின் இரண்டு கதாநாயகர்கள், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை..  தரமான க்ரைம் த்ரில்லர்.. படம் கொஞ்சம் மெதுவாகத்தான் நகரும் ஆனாலும் சுவாரஸ்யமாக இருக்கும்.. அந்த இரண்டு கதாநாயகர்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது... ஒளிப்பதிவு அட்டகாசம்! குறிப்பாக ஒரு நதியை படம்பிடித்த காட்சிகள் மிகவும் சிறப்பு 💯 இந்த படம் கொரியன் படமாக மெமரீஸ் ஆப் மர்டரர் சாயலில் இருந்தது குறிப்பிடத்தக்கது... த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *slow burning investigation thriller but very engaging one.. I would say go for it if you are looking for something to watch fresh.. 𝐖𝐎𝐑𝐓𝐇*  IMDB [ RATINGS : 7.2/10 & MY RATINGS : 7.7/10 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬-𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 Season 1 (𝟮𝟬𝟮𝟬-) England Teen comedy drama series review

Image
  𝗧𝗛𝗘 𝗕𝗔𝗕𝗬-𝗦𝗜𝗧𝗧𝗘𝗥𝗦 𝗖𝗟𝗨𝗕 SEASON 1 (𝟮𝟬𝟮𝟭-)  English Teen Comedy Drama Series ஒரு நான்கு இளம் பெண்கள் சேர்ந்து பெற்றோர்கள் வேலைக்கு சென்றவுடன் அவர்களின் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்ஸ் க்ளப் என்ற ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. எந்தவித ஆபாச காட்சிகளோ வசனங்களோ இல்லாத ஒரு நல்ல டீன் டிராமா.. மற்ற டீன் டிராமாக்களை விட கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருந்தது.. ஐந்து முதன்மை கதாபாத்திரங்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.. ஐந்து பேருமே க்யூட் தான் ஆனால் என்னுடைய ஃபேவரைட் கிரிஸ்டி தான்... அதோடு கேரன் என்று ஒரு சிறுமியின் கேமியோ ரொம்ப பிடித்தது.. அனைத்து வயதினரும் பார்க்க கூடிய ஒரு நல்ல தொடர்.. *A good teen drama, 20 minutes average running time for each episodes.. Comedy show but not a sitcom.. Everyone is just cute.. I'd say go for it.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDb : RATINGS : 7.5/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗤𝗔𝗟𝗔 (𝟮𝟬𝟮𝟮) Hindi Period Musical Drama Film

Image
  𝗤𝗔𝗟𝗔 (𝟮𝟬𝟮𝟮) Hindi Periodic Musical Drama Film திறமை இருந்தும் பெண் என்ற ஒரே காரணத்தினால் ஒடுக்கப்படும் கதாநாயகி, பல தடைகளையும் மீறி எப்படி அவர் மிகப்பெரிய பாடகியாக மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.. அற்புதமான ஒரு திரைப்படம்.. அட்டகாசமான மேக்கிங், ஆகச்சிறந்த இசை, தேர்ந்த நடிகர்களின் மிகச்சிறப்பான நடிப்பு இவையெல்லாம் இந்த படத்தை மிகவும் ரசிக்க வைக்கிறது.. கதாநாயகி திரிப்தி அவர்களின் நடிப்பு அட்டகாசம்.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சிறந்த நடிப்பு.. படத்தின் பாடல்கள் மிகவும் அழகாக இருந்தது.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *What a beautiful film..can't believe  Bollywood made this film.. Masterpiece in every aspect.. Technically brilliant & Actress Tripthi's performance is top class,she looks like little bit of Shraddha Kapoor,she is a latest addition to my crush list..Songs are repeat mode materials..that psychological elements was cherry on top of the cake..Loved this film.. Thanks to Netflix for this one..want more!*  [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ]