Posts

Showing posts from August, 2022

𝗢𝗡𝗟𝗬 𝗠𝗨𝗥𝗗𝗘𝗥𝗦 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗕𝗨𝗜𝗟𝗗𝗜𝗡𝗚 season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Comedy Crime investigation Thriller series

Image
  𝙊𝙉𝙇𝙔 𝙈𝙐𝙍𝘿𝙀𝙍𝙎 𝙄𝙉 𝙏𝙃𝙀 𝘽𝙐𝙄𝙇𝘿𝙄𝙉𝙂 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 2 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙸𝙽𝚅𝙴𝚂𝚃𝙸𝙶𝙰𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 முதல் சீசனின் க்ளைமாக்ஸில் அந்த அப்பார்ட்மென்ட்டின் மேனேஜர் கொலை செய்யப்பட, அந்த கொலையை செய்தது இந்த மூவர் தான் என்று கைது செய்யப்படுகிறார்கள்,அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்..  நிறைய ட்விஸ்ட்கள் நிறைந்த ஒரு கலகலப்பான காமெடி தொடர்.. டைமிங் காமெடி எல்லாம் சிறப்பாக இருந்தது.. இத்தொடரில் மிகவும் குறிப்பிட வேண்டியது இந்த மூன்று முதன்மை கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு தான், குறிப்பாக தலைவி செலீனா கோம்ஸ் நடித்துள்ள மேபுல் கதாபாத்திரம் வேற லெவல்..புகழ் பெற்ற பெண்மணியாக இருந்தும் சாதாரண கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததற்காக வாழ்த்துக்கள்.. தலைவியை திரையில் கண்டாலே பரவசமாக இருக்கிறது... எந்தவித ஆபாச காட்சிகளும், வசனங்களும் இல்லாத அற்புதமான தொடர் இது.. *Fantastic series.. Enjoyed Every minute.. Everything is just worked through out the series..Thalaivii Selena Gomez

𝗢𝗥𝗣𝗛𝗔𝗡 ; 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗞𝗜𝗟𝗟 (𝟮𝟬𝟮𝟮) English Psychological thriller film

Image
  𝙊𝙍𝙋𝙃𝘼𝙉 : 𝙁𝙄𝙍𝙎𝙏 𝙆𝙄𝙇𝙇 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 மனநல  மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் ஒரு சிறுமி, அவள் வெளியே சென்று செய்யும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.. இப்படம் 2009 ல் வெளியான ஆர்ஃபான் படத்தின் prequel ஆகும்..அது தரமான படம்..அந்த படத்தை இப்போது பார்த்தால் கூட அல்லு விட்டுரும்..ஆனால் அந்த படத்தில் உள்ள பயமும் பதட்டமும் இப்படத்தில் இல்லை,அதற்கு பதிலாக கதாநாயகியை கண்டால் பரிதாபமாக தான் இருக்கிறது.. இந்த படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் அந்த படம் அளவுக்கு இல்லை..இது Prequel என்று சொல்லப்படுகிறது ஆனால் வயது முதிர்ச்சி தெரிகிறது, பனிரெண்டு வருடங்கள் கழித்து Prequel எடுப்பதற்கான அவசியம் என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை, அதற்கு பதிலாக Sequel எடுத்திருக்கலாம்.. த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்..*Good but unnecessary prequel for me..in 1st part her little smile makes more scariness..First part is unmatchable.. Really loved her performance in this film too..should have made a sequel not prequel..ONE TIME WA

𝗧𝗛𝗘 𝗦𝗔𝗡𝗗𝗠𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) England Fantasy Series

Image
  𝙏𝙃𝙀 𝙎𝘼𝙉𝘿𝙈𝘼𝙉 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ரோட்ரிக் என்பவன் கனவுகளின் அரசனாகிய சான்ட்மேன் யை மந்திரம் செய்து பிடித்து கூண்டில் அடைத்து வைத்துக்கொண்டு சான்ட்மேனின் பவர் இருக்கும் பொருட்களை பிடுங்கி கொள்கிறான், அந்த பொருட்கள் காலப்போக்கில் பல இடங்களில் கைம்மாறி விடுகிறது, அதை எப்படி சான்ட்மேன் மீட்கிறார் என்பதுதான் இத்தொடரின் கதை... இந்த தொடரில் என்னை கவர்ந்தது இந்த தொடரின் மேக்கிங் மற்றும் கிராபிக்ஸ் தான், அட்டகாசமாக இருந்தது... இந்த தொடர் மெதுவான திரைக்கதையோடு நகர்ந்தாலும் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது... கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, குறிப்பாக சான்ட்மேன் கதாபாத்திரம் வேற லெவல்.. கான்ஸ்டன்டைன் என்ற கதாபாத்திரம் குறுகிய நேரத்தில் மட்டும் வந்திருந்தாலும் எனக்கு பிடித்தமான கதாபாத்திரமாக இருந்தது.. ஃபேண்டஸி அட்வென்ச்சர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *A superb fantasy series from Netflix.. Really enjoyed it.. I don't know abt tamil dub but English is just better.. Can't wait for season 2..WORTH WATCH* [ IMDB

𝗔 𝗗𝗘𝗔𝗧𝗛 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗚𝗨𝗡𝗝 (𝟮𝟬𝟭𝟲) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼

Image
  𝘼 𝘿𝙀𝘼𝙏𝙃 𝙄𝙉 𝙏𝙃𝙀 𝙂𝙐𝙉𝙅 (𝟮𝟬𝟭𝟲) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஷட்டு என்கிற கதாநாயகன் மற்றும் அவரது குடும்பத் தினர் கஞ்ச் என்ற இடத்திற்கு உறவினர்களை காண செல்கிறார்கள், சென்ற இடத்தில் விபரீதமான சம்பவம் ஒன்று நடந்து விடுகிறது,அது என்ன சம்பவம்? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இப்படம் உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது,இது த்ரில்லர் படம் என்று கூகுளில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எதற்காக என்றுதான் தெரியவில்லை, இந்த படத்தில் த்ரில்லர் காட்சிகள் என்று எதுவுமே இல்லை, ஆங்கிலம் கலந்த ஹிந்தி என்றும் புரியவில்லை..ஆனால் இப்படத்தில் பணக்கார வர்க்கத்துக்கும் ஏழை வர்க்கத்துக்கும் இடையிலான வேறுபாடு மற்றும் இயலாமை போன்ற விஷயங்களை மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தியுள்ளனர். விக்ராந்த் மெஸ்ஸே அவர்களின் நடிப்பு பிரமாதமாக இருந்தது..படத்தில் செட் வொர்க் மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.. *Slow paced family drama with shocking climax, World class cinema viewers may like this film but very hard pick for common audience.. Watch if you have plenty of t

𝗧𝗛𝗜𝗥𝗨𝗖𝗛𝗜𝗧𝗥𝗔𝗠𝗕𝗔𝗟𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟮) Tamil Romantic Family Drama Film

Image
  𝙏𝙃𝙄𝙍𝙐𝘾𝙃𝙄𝙏𝙍𝘼𝙈𝘽𝘼𝙇𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 தன் அப்பா வுடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் நம் கதாநாயகன், அவருடைய வாழ்வில் உள்ள காதல்,நட்பு, அன்பு பற்றியது தான் இப்படத்தின் கதை.. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து தனுஷ் படம் திரையரங்குகளில் வெளியானது, இந்த முறை தரமான மனதை லேசாக்ககூடிய கமர்சியல் படத்தோடு வந்துள்ளார்... சாதாரண கதை தான் ஆனால் தொய்வில்லாத காட்சியமைப்புகள் படத்தை ரசிக்க வைக்கிறது..அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக நித்யா மேனன் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு அட்டகாசம் 💯 இத்தனை பெரிய நடிகர்களுக்கு மத்தியில் ஒட்டுமொத்த திரையையும் ஆக்கிரமித்து விட்டார்... ஒரு தனுஷ் ரசிகராக எனக்கு எந்த குறையும் தெரியவில்லை , பொதுவான ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் தொய்வாக தெரியலாம்...*Superb Feel good melodrama film, Anirudh music is just amazing,Thenmozhi D version is surprise for me..Really enjoyed every minute of the film..if you wanna compress your stress and tension, go for it.. De

𝗡𝗔𝗥𝗖𝗢𝗦 season 1 to 3 (𝟮𝟬𝟭𝟱-𝟮𝟬𝟭𝟳) Spanish Crime Thriller Series

Image
 𝙉𝘼𝙍𝘾𝙊𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟭 𝚃𝙾 𝟯 (𝟮𝟬𝟭𝟱-𝟮𝟬𝟭𝟳) 𝚂𝙿𝙰𝙽𝙸𝚂𝙷 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஏஜென்ட் பீனா மற்றும் மர்ஃபி அவர்கள் எப்படி போதைப் பொருள் கடத்தல் மன்னனாக இருந்த பாப்லோ எஸ்கோபரை பிடித்தனர் என்பதுதான் இத்தொடரின் கதை.. இந்த தொடர் கொலம்பியாவில் நடந்த சம்பவங்களில் கிட்டத்தட்ட 60% உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகவும் மீதி 40% சினிமாவிற்காக புனையப்பட்டும் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது..ரொம்ப பரபரப்பான க்ரைம் சீரிஸ்..அனைவரின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது, குறிப்பாக எஸ்கோபராக நடித்த நபரின் நடிப்பு வெறித்தனமாக இருந்தது💯 மேக்கிங் தரமாக இருந்தது..மூன்று சீசன்களையும் சேர்த்து மொத்தம் 30 Episode களை உள்ளடக்கிய தரமான தொடர் இது..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. *One of the best series ever I seen, Acting, Making, Music in everything is just perfect.,Really Enjoyed this Hell Ride..I'd say go for it but strictly for Adults, Heavy Sexual and Violence content is there🔞🔞* 𝗠𝗨𝗦𝗧 𝗪𝗔𝗧𝗖𝗛 [ IMDB RATINGS : 8.8/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎

Marvel studios 𝗜 𝗔𝗠 𝗚𝗥𝗢𝗢𝗧 season 1 (𝟮𝟬𝟮𝟮-)English Animation series

Image
  Marvel Studios 𝙄 𝘼𝙈 𝙂𝙍𝙊𝙊𝙏 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙽𝙸𝙼𝙰𝚃𝙸𝙾𝙽 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஐ எம் க்ரூட் என்பது கார்டியன் ஆப் தி கேலக்ஸி யுனிவர்சலில் வரக்கூடிய மரக்கட்டை உருவ அமைப்பை கொண்ட கதாப்பாத்திரம்..அதன் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை.. தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப எதிர்பார்த்த மார்வெல் சீரிஸ் இதுதான்.. ஆனால் எனக்கு இந்த சீரிஸ் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது, காரணம் இந்த சீரிஸ் 15 நிமிடங்கள் மட்டுமே  ஓடுகிறது, அட ஒரு Episode 15 நிமிடம் என்றால் பரவாயில்லை ஆனால் ஒட்டுமொத்த சீரிஸ் யையும் சேர்த்தே 15 நிமிடங்கள் தான், அதிலும் 5 நிமிடம் க்ரெடிட் க்கு போய்விடுகிறது, மீதி பத்து நிமிடம் தான் சீரிஸே.. இந்த பத்து நிமிடம் நன்றாக இருந்ததா என்று கேட்டால் ஆம் சிறப்பாக இருந்தது.. க்ரூட் செய்யும் குட்டி கலாட்டாக்கள் சிறப்பு 💯 ஆனால் குட்டி கலாட்டாக்கள் ரொம்ப குட்டியாக இருந்ததுதான் வேதனை அளிக்கிறது.. * Very short web series ever I seen.. But okay it's nice.. Fun and entertainment guaranteed.. *   [ MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

𝗚𝗔𝗥𝗚𝗜 (𝟮𝟬𝟮𝟮) Tamil Courtroom Investigation Drama/Thriller Film

Image
 𝙂𝘼𝙍𝙂𝙔 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙲𝙾𝚄𝚁𝚃𝚁𝙾𝙾𝙼 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁/𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படும் கதாநாயகியின் தந்தை.. தன் தந்தை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் கதாநாயகி.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. விழி அகற்றி பார்த்த தரமான படம்.. இது ஒரு டிராமா ஜோனர் படம் தான் ஆனால் ஒரு நொடி கூட தொய்வாக இருக்காது, பரபரப்பாக இருக்கும்.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மிரட்டலாக இருந்தது..சாய் பல்லவி மற்றும் காளி வெங்கட் அவர்களின் நடிப்பு ரொம்ப சிறப்பாக இருந்தது... ஜெய்பீம்,மனிதன், ஜன மண கன, செக்டர் 375, பொன்மகள் வந்தாள் போன்ற படங்கள் பிடித்தவர்களுக்கு இப்படமும் பிடிக்கும்.. * Excellent Courtroom investigation drama Film with Shocking Climax twist.. Yup everyone should watch this film.. MUST WATCH * [ IMDB RATINGS : 8.6/10 And MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩

𝗦𝗜𝗧𝗔 𝗥𝗔𝗠𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟮) Telugu periodic romantic Drama film

Image
  𝙎𝙄𝙏𝘼 𝙍𝘼𝙈𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙴𝙻𝚄𝙶𝚄 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணிடம் அவரது தாத்தா அவர்கள் ராம் என்பவர் சீதா மகாலட்சுமி என்பவருக்கு எழுதிய ஒரு கடிதத்தை கொடுத்து உரிய நபரிடம் கொடுத்து விட சொல்கிறார், இதுதான் எனது கடைசி ஆசை என்றும் கூறுகிறார், யார் இந்த சீதா ராம்? அவர்களின் வரலாற்று பூர்வமான காதல் கதை தான் இப்படத்தின் கதை.. அற்புதமான ஒரு காதல் திரைப்படம்.. ஒவ்வொரு காட்சியும் மனம் நெகிழவும், க்ளைமாக்ஸ் கண்ணீரையும் வர வைக்கிறது.. சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூரின் நடிப்பு அட்டகாசம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நடிப்பு, கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்💯 படத்தின் மேக்கிங் மற்றும் இசை தரம் 💯 அனைவரும் பார்க்க வேண்டிய உன்னதமான காதல் காவியம்..*this kinda romantic film I was expected from Radhe Shyam but it end up a utter trash but this is Outstanding Romantic film..Probably the best film of the year, this film and actress Mrunal Thakur deserves a National award 💯 Loved each and every scene 💖

𝙉𝙊 𝙀𝙓𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) English Thriller Film

Image
  𝙉𝙊 𝙀𝙓𝙄𝙏 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼  உடல்நலம் சரியில்லாத தன் அம்மாவை பார்க்க போகும் வழியில் பனிமூட்டத்தில் மாட்டிக்கொள்கிறார் படத்தின் கதாநாயகி,வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு விடுதிக்கு செல்கிறார், அங்கு சென்றவுடன் தான் தெரிகிறது ஒரு சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என்று, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்லும் தரமான த்ரில்லர் படம்.. ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் பெரிய அளவில் ட்விஸ்ட் ஏதும் இல்லாவிட்டாலும் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. கதாநாயகியின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒளிப்பதிவு அட்டகாசம் 💯 த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Engaging screenplay, superb cinematography,nice performance,overall good thriller.. Definitely Worth one..* [ IMDB RATINGS : 6.1/10 BUT MY RATINGS : 𝟳.𝟳𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+

𝙈𝙄𝙉𝙄𝙊𝙉𝙎 - 𝙏𝙃𝙀 𝙍𝙄𝙎𝙆 𝙊𝙁 𝙂𝙍𝙐 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙽𝙸𝙼𝙰𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼

Image
  𝙈𝙄𝙉𝙄𝙊𝙉𝙎 - 𝙏𝙃𝙀 𝙍𝙄𝙎𝙀 𝙊𝙁 𝙂𝙍𝙐 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙽𝙸𝙼𝙰𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 படத்தின் கதாநாயகனான குரு சூப்பர் வில்லன் ஆக வேண்டும் என்று ஆசையோடு திரியும் நேரத்தில் ஒரு சூப்பர் வில்லனால் கடத்தப்படுகிறார், அவரை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று புறப்படும் மினியன்ஸ், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... அட்டகாசமாக இருந்தது.. இந்த படத்தில் என்னென்ன எதிர்பார்த்தேனோ அது எல்லாமே இருந்தது.. முதல் பாகம் அளவிற்கு இல்லை தான், ஆனால் இப்படம் ரசிக்க வைக்க தவறவில்லை.. மினியன்ஸ் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..காமெடி காட்சிகள் நிறைந்த ஒரு அனிமேஷன் திரைப்படம்.. அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..*Super duper comedy feast 💥 Entertainment guaranteed Animation film, enjoyed throughout the film.. Watch with kids, they will love it* [ IMDB RATINGS : 6.4/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ]

𝙋𝙐𝙍𝙋𝙇𝙀 𝙃𝙀𝘼𝙍𝙏𝙎 (𝟮𝟬𝟮𝟮) English Romantic Drama Film

Image
  𝙋𝙐𝙍𝙋𝙇𝙀 𝙃𝙀𝘼𝙍𝙏𝙎 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷  𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 பணம் இல்லாமல் சிரமப்படும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி, இருவரும் திருமணம் செய்து கொண்டால் குறிப்பிட்ட பணம் கிடைக்கும் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல காதல் படம் பார்த்த ஒரு உணர்வை இப்படம் கொடுத்தது.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் நடிப்பும் நன்றாக இருந்தது..இது ஒரு இசையோடு கலந்த காதல் படம், இப்படத்தின் இசை அட்டகாசம் 💯 Netflix வழக்கம்போல க்ளைமாக்ஸ்ல சொதப்பிருவான்னு நெனச்சேன் ஆனால் நல்லவேளை அப்படி எதுவும் செய்யல 🙂.. இக்கால காதல் படங்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்.. *Good new age period romantic drama from Netflix.. If you like "after" Film series, I'd say go for it..* [ IMDB RATINGS : 7/10 And MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝙎𝙇𝙊𝙒 𝙃𝙊𝙍𝙎𝙀𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (2022-) British Spy Action Thriller Series

Image
  𝙎𝙇𝙊𝙒 𝙃𝙊𝙍𝙎𝙀𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟮𝟮-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝚂𝙿𝚈 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 பெரிய அளவில் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத ஸ்லோ ஹவுஸ் என்கிற ஒரு ஸ்பை ஏஜென்சி உள்ளது,  ஒரு டம்மி ஆபிஸ், அங்கு சகிப்புத் தன்மையோடு கதாநாயகன் பணி புரிகிறார், ஒரு நாள் ஒரு தீவிரவாத கும்பல் ஒருவரை கடத்துகிறது, இந்த விஷயத்தை தானே கண்டுபிடிக்க போகிறேன் என்று களத்தில் இறங்கும் கதாநாயகன் மற்றும் ஸ்லோ ஹவுஸ் அதிகாரிகள், இதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இத்தொடரின் கதை... நான் அரிதாக பொறுக்கி எடுத்த ஒரு நல்ல த்ரில்லர் சீரிஸ், முதல் பத்து நிமிடம் பார்த்தாலே புரியும் இது எந்த அளவுக்கு பரபரப்பான சீரிஸ் என்று.. சலனம் இல்லாமல் பார்த்தால் இதன் சுவாரஸ்யத்தை அறியலாம்... கேரி அவர்களின் கதாப்பாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு பிரமாதம்... நெட்ஃபிலிக்ஸ் கமர்சியல் ரசிகர்கள் இதை பார்க்காமல் இருப்பது நல்லது🙂. *Superb series, fast pased sometimes, slow paced sometimes, mixed screenplay.. Run in dark mode without any sexual content..so Netflix thriller fans should be stay away from this one..* [ IMD