Posts

Showing posts from September, 2023

𝗦𝗖𝗔𝗠 𝟮𝟬𝟬𝟯 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Crime drama series review

Image
  𝗦𝗖𝗔𝗠 𝟮𝟬𝟬𝟯 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Crime drama series கதாநாயகன் படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் ரயில் நிலையத்தில் பழம் விற்று வருகிறார், அவருக்கு மும்பையில் பணிபுரியும் வாய்ப்பு வருகிறது, ஒரு நல்ல நிலைக்கு வருகிறார், இருந்தும் அவருக்கு அந்த தொழிலில் திருப்தி இல்லை, அதன் காரணமாக வேறு ஒரு தொழிலில் இறங்குகிறார், அது என்ன தொழில்,அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான க்ரைம் டிராமா.. இது ஸ்கேம் 1992 இயக்குனரின் அடுத்த படைப்பு.. இந்த முறை அவர் எடுத்துள்ள கதைக்களம் அப்துல் கரீம் டெல்கியை பற்றியது.. ஸ்கேம் 1992 அளவுக்கு பரபரப்பாக இல்லாவிட்டாலும் இதுவும் ஒரு சுவாரஸ்யமான தொடர் தான்... அப்துலாக நடித்த நடிகரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. மெதுவாக நகர்ந்தாலும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல தொடர்.. *A brilliant crime drama which explores 30k crores scam done by Abdul karim telgi.. Creators have done pretty good work with their detailing about this scam..business minded people should definitely watch this series for understand how system works..liked it..𝐖𝐎𝐑𝐓𝐇

𝗛𝗢𝗠𝗘 𝗙𝗢𝗥 𝗥𝗘𝗡𝗧 (𝟮𝟬𝟮𝟯-) Thai Mystery horror thriller film review

Image
  𝗛𝗢𝗠𝗘 𝗙𝗢𝗥 𝗥𝗘𝗡𝗧 (𝟮𝟬𝟮𝟯-) Thai Mystery horror thriller film கதாநாயகி தனக்கு இருக்கும் பணப் பிரச்சினை காரணமாக தன் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு குடும்பத்தோடு வேறு வீட்டிற்கு குடி போகிறார்,வாடகைக்கு விட்ட பிறகு அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான மிஸ்ட்ரி ஹாரர் த்ரில்லர் படம்.. இப்படத்தின் கதையும் திரைக்கதையும் மிக சிறப்பாக இருந்தது.. ஒரே மாதிரியான காட்சிகள் வேறுவேறு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும், அந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடித்தது.. ஹாரர் படம் போல் ஆரம்பித்து மிஸ்ட்ரி த்ரில்லராக மாறும் காட்சிகள் தரம்.. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பிண்ணனி இசை சிறப்பாக இருந்தது.. எடிட்டிங் வேற லெவல்.. ஹாரர்/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..   *A brilliant horror/mystery thriller film which explores the black magic and their cheap intentions..screenplay was very good.. Everything was perfect in this film like Editing,Music, cinematography, twist&turns.. Liked it very much.. 𝐖𝐎𝐑𝐓𝐇+

𝗪𝗘𝗟𝗖𝗢𝗠𝗘 𝗧𝗢 𝗪𝗔𝗜𝗞𝗜𝗞𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic comedy drama series review

Image
  𝗪𝗘𝗟𝗖𝗢𝗠𝗘 𝗧𝗢 𝗪𝗔𝗜𝗞𝗜𝗞𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic comedy drama series  கதாநாயகன் மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர், ஒரு முறை எழுந்து பார்க்கும்போது யாரென்றே தெரியாத குழந்தை ஒன்றை அந்த ஹோட்டல் விட்டுச் சென்று விட்டனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அற்புதமான காமெடி டிராமா.. ரிப்ளை 1988 க்கு பிறகு நல்ல காமெடிகள் அமைக்கப்பட்ட கொரியன் டிராமா இதுதான் என்று நினைக்கிறேன்.. தொடரில் மொத்தம் ஆறு பிரதான கதாபாத்திரங்கள் உள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒரு சில காட்சிகள் கொஞ்சம் கீழ்த்தரமாக (ஸ்டீரியோடைபிக்) இருந்தது.. மற்றபடி இது ஒரு தரமான பொழுதுபோக்கு தொடர்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *An amazing kdrama which explores nothing but comedy.. They've done pretty good Work in writing comedies..I laughed out loud in many sequences..It's absolutely hilarious.. But I feel they did some stereotypical scenes which made me feel awkward at the moment.. But it's def

𝗛𝗜𝗝𝗔𝗖𝗞 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Thriller series review

Image
  𝗛𝗜𝗝𝗔𝗖𝗞 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Thriller series துபாயில் இருந்து லண்டனுக்கு செல்லும் விமானம் ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்படுகிறது, அந்த விமானத்தில் கதாநாயகனும் பயணிக்கிறார்,அவரது வேலையே என்னவென்றால் பேரம் பேசி காரியத்தை முடிப்பது தான்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஹை ஜாக் த்ரில்லர் சீரிஸ்.. நொடிக்கு நொடி பரபரப்பாகவும் விறுவிறுப்பாககவும் இருந்தது.. கதாநாயகனின் ரோல் ஆரம்பத்தில் கொஞ்சம் டம்மியாக சித்தரிக்கப் பட்டிருந்தாலும்,போக போக சிறப்பாக இருந்தது.. மேக்கிங் மற்றும் ஒளி அமைப்பு பிரமாதம்.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *An amazing hijack thriller..old template story but treatment was brilliant.. Never felt bored.. Engaging screenplay trough out the series..performances were neat.. Btw that lady Hijacker was cute 🥰.. I'd definitely recommend this to watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

Image
  𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series குலாப்கன்ஞ் என்ற இடத்தில் ஓப்பியம் என்னும் போதைச்செடி வளர்கிறது, அதை வியாபாரம் செய்ய இரு கேங் போட்டி போடுகிறது,இதற்கு இடையில் சிக்கிக்கொண்ட மெக்கானிக்கான ஒரு கதாநாயகன் மற்றும் காவலரான மற்றொரு கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. கடைசி EPISODE யை தவிர்த்து விட்டு பார்த்தால் இது கொஞ்சம் சுமாரான சீரிஸ் தான்.. நல்ல கதை,அற்புதமான நடிகர்கள்,தரமான படைப்பாளிகள் இருந்தும் இந்த சீரிஸ் நம்மை ரசிக்க வைக்க தவறிவிட்டது.. ஒரு சில இடங்களில் ராஜ்குமார் ராவ் செய்யும் காமெடிகள் நன்றாக இருந்தது, மற்ற படி சொல்லும் அளவுக்கு சிறப்பாக இல்லை.. துல்கர் சல்மான் கதாபாத்திரம் ரொம்ப டம்மியாக இருந்தது.. இந்த வருடத்தில் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்த சினிமாவில் இதுவும் ஒன்று..  *An average series with very good final episode.. Comedies worked in parts.. Shreya D character wasted and unnecessary.. Making was good.. Good concept but failed in execution..Rare downfall for Raj&Dk.. Not recommended.. 𝐀𝐍 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀

𝗦𝗔𝗙𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series review

Image
  𝗦𝗔𝗙𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series கதாநாயகனின் மகள், தன் தோழி வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு செல்கிறார், ஆனால் திரும்பி வரவே இல்லை, கதாநாயகன் தன் மகளை காணும் என்ற விரக்தியில் தேடுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸ்..இது புகழ்பெற்ற ஹாரலன் கோபனின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட தொடர், திரைக்கதை மற்றும் எடிட்டிங் மிக சிறப்பாக இருந்தது.. எட்டு Episodeகள் கொண்ட இத்தொடரில் எங்கேயும் தொய்வு இல்லை, அடுத்தடுத்து ட்விஸ்ட் என்று மிரட்டியுள்ளனர்... த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர்.. *A brilliant adoption from Harlan coben's novel.. What a screenplay & editing 👌 became a fan of Coben after watching his Novel adoptions like Safe,Innocent,Shelter etc,& Started to read his novel ✌️I'd definitely recommend this series..𝐖𝐎𝐑𝐓𝐇++* [MY RATING : 𝟴.𝟱/𝟭𝟬] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 3 (𝟮𝟬𝟮𝟯-) English Action thriller series review

Image
  𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 3 (𝟮𝟬𝟮𝟯-) English Action thriller series சைனாடவுனில் நடந்த கலவரத்திற்கு பிறகு மக்கள் அஸாமை ஹீரோ போன்று பார்க்க ஆரம்பித்தனர்,ஹாப் வை வியாபாரத்தை விரிவாக்க போலி நோட்டுகளை தயாரிக்க ஆரம்பிக்கிறனர்,அந்த பக்கம் லாங் ஸி மற்ற டாங் வுடன் கூட்டணி அமைக்கின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்.. சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி அதகலமாக இருந்தது, சைனாடவுனை தாண்டி நடக்கும் அரசியல் காட்சிகள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை.. பெனிலோபி பிலேக்கிற்கு என்ன நடந்தது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.. கடந்த சீசன் அளவுக்கு இல்லாவிட்டாலும் இது ஒரு தொய்வில்லாத நல்ல தொடர்.. ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு பார்க்கலாம்.. *A good addition from the great series.. As usual making was brilliant..some of the scenes were really good & some weren't good.. Engaging screenplay made this mid a good.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗛𝗕𝗢 𝗠𝗔𝗫

𝗞𝗔𝗔𝗟𝗞𝗢𝗢𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime drama series review

Image
  𝗞𝗔𝗔𝗟𝗞𝗢𝗢𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime drama series கதாநாயகன் ஒரு காவல்துறை அதிகாரி,அவருக்கு அந்த வேலையில் ஆர்வமே இல்லை..ஒரு பெண் மீது மரம நபரால் ஆசிட் வீசப்படுகிறது,அந்த வழக்கு கதாநாயகனிடம் வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஒரு நல்ல தொடர்.. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது, க்ளைமாக்ஸை தவிர.. ஓரளவுக்கு நன்றாக கதையை நகர்த்தி சுமாராக முடித்து விட்டனர்..கதாநாயகன் விஜய் வர்மாவின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. *A good series with average climax.. This series contains a serious matter which is represent our damn country..kudos to the team for took that matter.. If you like slow drama with social content,this series is definitely yours.. 𝐃𝐄𝐂𝐄𝐍𝐓* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔

𝗪𝗜𝗟𝗟 𝗬𝗢𝗨 𝗕𝗘 𝗧𝗛𝗘𝗥𝗘 (𝟮𝟬𝟭𝟲) Korean Romantic drama film review

Image
𝗪𝗜𝗟𝗟 𝗬𝗢𝗨 𝗕𝗘 𝗧𝗛𝗘𝗥𝗘 (𝟮𝟬𝟭𝟲) Korean Romantic drama film கதாநாயகன் ஒரு மருத்துவர்,ஒரு முறை அவருக்கு கடந்த காலத்திற்கு செல்லும் மருந்து கிடைக்கிறது,கடந்த காலத்தில் உள்ள தன்னை சந்திக்க நேர்கிறது, கடந்த காலத்தில் சில மாறுதல்களை செய்தால் தன் நிகழ்காலம் மாறும் என நினைக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான திரைப்படம்.. செம கான்செப்ட்.. படத்தில் மேக்கிங் மற்றும் எடிட்டிங் மிக சிறப்பாக இருந்தது.. தெளிவாக திரைக்கதை.. இரண்டு வேறுபட்ட காலத்தை காட்டினாலும் எங்கேயும் குழப்பம் ஏற்படவில்லை.. இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகள் ரொம்ப எமோசனல் ஆக இருந்தது... கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்..  *A beautiful romantic drama with time travel concept.. Making and Editing was brilliant.. Both hero performance was good.. Emotional scenes worked very well in second half.. Loved this film.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫  

𝗚𝗛𝗢𝗨𝗟 Season 1 (𝟮𝟬𝟭𝟴-) Hindi horror thriller series review

Image
  𝗚𝗛𝗢𝗨𝗟 Season 1 (𝟮𝟬𝟭𝟴-) Hindi horror thriller series கதாநாயகி ஒரு போலீஸ், தன் தந்தை ஒரு தேசத்துரோகி என்ற தெரிந்தவுடன் ஆர்மியிடம் ஒப்படைக்கிறார்,இதனால் அவருக்கு அங்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. மிரட்டலான ஹாரர் தொடர்.. மொத்தமே மூன்று Episode கள் தான், மூன்றும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக கடைசி இரண்டு Episode கள் தரம்.. பயமும் பதற்றமும் ஏற்படக்கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.. ஹாரர் த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. குழந்தைகள் இத்தொடரை தவிர்ப்பது நல்லது..  *A Good horror thriller with few brilliant Jump scares.. Radhika Apde performance was good.. Making was neat.. Horror thriller fans will love this series.. It's available In tamil dubbed.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗛𝗘 𝗛𝗨𝗡𝗧 𝗙𝗢𝗥 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯-) Netflix Documentary series review

Image
  𝗧𝗛𝗘 𝗛𝗨𝗡𝗧 𝗙𝗢𝗥 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯-) Netflix Documentary series சந்தனக் கடத்தல் வீரப்பன் எப்படியெல்லாம் அச்சுறுத்தலாக இருந்தார், அவரை எப்படி காவல்துறை கண்டுபிடித்தது என்பது தான் இத்தொடரின் கதை.. இது நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஆனால் இந்த கதைகளுக்கு பின் இருக்ககூடிய உண்மைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ள தரமான படைப்பு.. எந்த பக்கமும் இல்லாமல் சமரசமாக எடுத்துள்ளனர்.. வீரப்பன் மனைவி மற்றும் அவரது குழுவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் & பத்திரிகை நிருபர்கள் வாயிலாகவே இந்த கதை மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. டாக்குமெண்டரி என்பதையும் தாண்டி இத்தொடர் ரொம்ப சுவாரஸ்யமாகவே உள்ளது.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *A fantastic and very detailing documentary series..gripping narration make this series awesome..Really liked it.. I'd definitely recommend this well made product.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATING : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

Image
  𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series கதாநாயகி அவர் கல்லூரியில் ப்ராஜெக்ட் ஒன்றை ஒப்படைக்க வேண்டியிருக்கிறது, அதற்காக வித்தியாசமான ஆப் ஒன்றை உருவாக்க திட்டம் போடுகிறார்,அதற்காக இரு நண்பர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறார்.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இன்றைய காலத்து இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல தொடர்.. இந்த தொடர் அந்தரங்க விஷயங்களை பற்றி தான் பேசுகிறது, அதனாலோ என்னவோ எங்கேயும் சலிப்பு தட்டவில்லை.. இது வயது வந்தோர் க்கான தொடர், அதனால் 18+ நபர்கள் மட்டும் பார்க்கலாம்.. *An adult comedy series which is talk about self orgasm presented in funny way.. Colorful series..Liked it.. This generation people may like this series.. 🔞🔞 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗠𝗔𝗟𝗟𝗜 𝗥𝗔𝗔𝗩𝗔 (𝟮𝟬𝟭𝟳) Telugu Romantic comedy film review

Image
  𝗠𝗔𝗟𝗟𝗜 𝗥𝗔𝗔𝗩𝗔 (𝟮𝟬𝟭𝟳) Telugu Romantic comedy film கதாநாயகன் தனது பள்ளிப் பருவ காதலியை மீண்டும் பார்க்க நேர்கிறது,மீண்டும் அவருக்கு அவள் மீது காதல் ஏற்பட, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு முறை பார்க்க கூடிய நல்ல காதல் திரைப்படம்.. இப்படத்தை நெட்டிசன்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருந்தனர்,ஆனால் இப்படம் அந்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை.. பிரதான கதாபாத்திரங்களின் நடிப்பு நன்றாக இருந்தது.. இந்த படத்தின் கான்செப்ட்டிலேயே ஒரு பெரிய குழப்பம், படத்தின் ஜோடி ஒன்று சேர்வார்களா மாட்டார்களா என்பதை சுவாரஸ்யமாக சொல்லவில்லை.. அவர்கள் எப்படி போனா நமக்கென்ன என்ற அளவுக்குத்தான் இருந்தது..காதல் பட ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்..  *A Decent Romantic drama with good music..concept was very outdated and draggy..this film may give butterflies only for couples or lovers, others will get nothing.. 𝐃𝐄𝐂𝐄𝐍𝐓* [ MY RATING : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘