Posts

Showing posts from July, 2023

𝗧𝗘𝗛𝗥𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Hebrew spy thriller series review

Image
  𝗧𝗘𝗛𝗥𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Hebrew spy thriller series கதாநாயகி ஒரு இஸ்ரேலியன் ஏஜெண்ட்,ஒரு மிஷன் க்காக ஈரானிய நகரமான டெஹ்ரானிற்குள் செல்கிறார்,ஆனால் டெஹ்ரானிற்குள் இஸ்ரேலியர்களுக்கு அனுமதி இல்லை, இவர் சென்றது அங்கு உள்ள போலிஸிற்கு தெரிந்து விடுகிறது , இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்.. மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு ஸ்பை த்ரில்லர் தான், ஆனால் இதில் நிறைய அரசியல் பேசப்பட்டுள்ளது, எனக்கு அரேபிய நாடுகளின் அரசியலில் அந்த அளவுக்கு புரிதல் கிடையாது, அதனால் இதில் செல்லப்பட்டுள்ள விஷயம் சரியா தவறா என்று தீர்மானிக்க முடியாது.. திரைக்கதை கொஞ்சம் ஏற்றம் இறக்கமாக தான் இருந்தது.. கதாநாயகி தமர் ரபின்யான் கதாபாத்திரம் 💥 என்ன அழகு 😍💓.. ஸ்பை த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An engaging spy thriller series with solid writing.. Title theme was nice..I've got goosebumps in some scenes.. Heroine character was good & she was beautiful though..I'd suggest this for spy thriller fans.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬

𝗨𝗡𝗗𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗗𝗢𝗠𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟯-) English Fantasy mystery thriller series review

Image
  𝗨𝗡𝗗𝗘𝗥 𝗧𝗛𝗘 𝗗𝗢𝗠𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟯-) English Fantasy mystery thriller series செஸ்டர்ஸ்மில் என்ற ஒரு நகரத்தை சுற்றி ஒரு நாள் கண்ணுக்குத் தெரியாத படலம் போல் தோன்றுகிறது,நகர மக்கள் வெளியேயும்,வெளியே உள்ள மக்கள் உள்ளேயும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான தொடர்..இதன் கதையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது.. தொய்வில்லாத திரைக்கதை இத்தொடரை மேலும் சிறப்பாக்கியுள்ளது.. மொத்தம் 13 Episode களை கொண்ட இந்த தொடர் எங்கேயும் தொய்வாக இல்லை.. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் மிக சிறப்பாக இருந்தது.. ஃபேண்டஸி/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An excellent fantasy mystery thriller.. It was so interesting, kinda survival thriller..This genre is absolutely likable..enjoyed every bit of the series..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗔𝗚𝗘𝗡𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Spy action thriller series review

Image
  𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗔𝗚𝗘𝗡𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Spy action thriller series கதாநாயகன் ஒரு FBI ஏஜெண்ட், ஒரு நாள் மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்ட வெடி குண்டிலிந்து மக்களை காப்பாற்ற முற்படுகிறார்,இருந்தும் சில உயிரிழப்பு ஏற்படுகிறது,இதன் காரணமாக அவர் வெள்ளை மாளிகையில் உள்ள நைட் ஆக்ஷன் என்ற இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்,அந்த நைட் ஆக்ஷனுக்கு ஆபத்து என ஒரு அழைப்பு வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்... அங்கங்கே தொய்வு இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி மற்றும் டயான் ஃபார் என்ற மூன்று பிரதான கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது... ஒரு சில தொய்விற்கு காரணம் 10 Episode கள் இருப்பதால் தான்,கொஞ்சம் குறைத்திருக்கலாம்..ஒரு சில ட்விஸ்ட்களும் சிறப்பாக இருந்தது..ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *A very good spy action thriller series.. Screenplay was made in fast based.. Those twists which was unfolded at later was

𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 2 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Comedy family drama series

Image
  𝗚𝗨𝗟𝗟𝗔𝗞 Season 2 (𝟮𝟬𝟮𝟭-) Hindi Comedy family drama series சந்தோஷ் மிஷ்ரா மற்றும் அவரது குடும்பத்தில் நடக்கும் தினசரி சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. அட்டகாசமான ஃபேமிலி டிராமா சீரிஸ்..இந்த கதை அவர்கள் வீட்டில் உள்ள ஒரு உண்டியல் வாயிலாக சொல்லப்படுகிறது, அதுதான் இந்த தொடரின் சிறப்பம்சமே..நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது..பிரதான ஐந்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருந்தது.. கலகலப்பான மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைந்த தொடர்.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. *A Beautiful series, probably my favorite Indian web series too.. Loved the characters and their design.. Voice over from piggyback was a poetic..Everything in the series is absolutely appreciatable.. I'd definitely recommend this masterpiece.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATINGS : 𝟵.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗢𝗡𝗬 𝗟𝗜𝗩

𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) Korean Romantic comedy Drama series review

Image
  𝗠𝗬 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗙𝗜𝗥𝗦𝗧 𝗟𝗢𝗩𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟵-) Korean Romantic comedy Drama series கதாநாயகன் ஒரு பெரிய பணக்காரராக இருக்கிறார், அவருக்கு ஒரு நான்கு நண்பர்கள் உள்ளனர்,அவர்கள் அனைவரும் சந்தர்ப்ப சூழல் காரணமாக இவரிடம் அடைக்கலம் தேடி வருகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அழகான கொரியன் டிராமா.. கொரியன் டிராமாக்களில் காதல்,காமெடி, எமோஷன் என எல்லாவற்றையும் கலந்து அழகாக எடுப்பர்,இந்த தொடரும் அதற்கு விதிவிலக்கு அல்ல... மொத்தமே 8 Episode கள் தான்,எல்லாமே ரசிக்கும் வகையில் இருந்தது.. கொரியன் டிராமாக்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த தொடரும் பிடிக்கும்.. *A beautiful kdrama,loved the storyline & characters.. Enjoyed very much..there has a second season too, I'm about to start it..kdrama fans will like this drama.. 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥* [ MY RATING : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Season 1 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy Action thriller series review

Image
  𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗥 Season 1 Part 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Spy Action thriller series முன்னாள் கடற்படை அதிகாரியான கதாநாயகன் ஒரு ஹோட்டலில் நைட் மேனேஜராக பணிபுரிகிறார், ஒரு மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் தலைவனை வேவு பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்.. இது ஒரு ஆங்கிலத் தொடரின் தழுவலாக இருக்கலாம், ஆனாலும் சிறப்பான தொடர்.. இந்த தொடரில் குறிப்பிட்ட மூன்று கதாபாத்திரங்களான அனில் கபூர்,ஆதித்யா ராய் கபூர் & திலோத்தமா அவர்களின வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது, ஷோபிதா டுயலிபா கதாபாத்திரம் ஒரு விளம்பர பொம்மை போல் உள்ளது,ஏன் எதற்கு என்றே தெரியவில்லை 🤷‍♂️ த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Superb spy action thriller series.. Screenplay was Engaging through the series.. Liked it very much..Climax shot was emotional.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

𝗔𝗡𝗗 𝗧𝗛𝗘𝗡 𝗧𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘𝗥𝗘 𝗡𝗢𝗡𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) English Mystery thriller series review

Image
  𝗔𝗡𝗗 𝗧𝗛𝗘𝗡 𝗧𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘𝗥𝗘 𝗡𝗢𝗡𝗘 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) English Mystery thriller series ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத 8 பேருக்கு ஒரு தனி தீவிலிருந்து அழைப்பு வருகிறது, அங்கு சென்ற இவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இந்த சீரிஸ் அகத்தா கிரிஸ்டியின் புகழ்பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.. அட்டகாசமான மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸ்.. மொத்தமே மூன்று Episode கள் தான், ஒவ்வொரு Episode ம் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்..சீரிஸில் வரும் பத்து கதாபாத்திரங்களின் தேர்வு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை கடைசி வரை யூகிக்க முடியவில்லை.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An Excellent mystery thriller series..this series basically inspired from Agatha Christy's famous novel..good adoption.. Couldn't guess the climax.. cinematography & background score was good..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [ MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 𝗩𝗜𝗗𝗘𝗢

𝗞𝗘𝗥𝗔𝗟𝗔 𝗖𝗥𝗜𝗠𝗘 𝗙𝗜𝗟𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller series review

Image
  𝗞𝗘𝗥𝗔𝗟𝗔 𝗖𝗥𝗜𝗠𝗘 𝗙𝗜𝗟𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Malayalam Crime thriller series  ஒரு லாட்ஜில் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்மணி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்,இந்த கொலை வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறது காவல்துறை,கொலைகாரனின் பெயர் சிஜூ மற்றும் அவனுடைய பொய்யான முகவரி மட்டும் தடயமாக கிடைக்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் சீரிஸ்.. மலையாளத்தில் தயாரான முதல் வெப் சீரிஸ் என்ற பெருமை இத்தொடருக்கு உண்டு.. இரண்டே முக்கால் மணிநேரம் ஓடக்கூடிய இத்தொடர் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாகவே எடுத்துள்ளனர்..த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Good crime thriller web series from Malayalam industry.. Engaging through the series, never felt bored.. Liked it.. And Tamil dubbed available for this one, dubbing was very neat.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

𝗚𝗛𝗢𝗦𝗧𝗦 𝗢𝗙 𝗕𝗘𝗜𝗥𝗨𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English thriller series review

Image
  𝗚𝗛𝗢𝗦𝗧𝗦 𝗢𝗙 𝗕𝗘𝗜𝗥𝗨𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Thriller series பெய்ரூட் நகரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வரும் ரட்வான் எனும் பயங்கரவாதியை காவல்துறை அதிகாரிகள் பிடித்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான த்ரில்லர் சீரிஸ்.. 4 Episode கள் மட்டுமே.. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருந்தது.. ரட்வான் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒளிப்பதிவு மற்றும் பிண்ணனி இசை சிறப்பு.. விரசமே இல்லாத தரமான த்ரில்லர் தொடர்.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An Excellent thriller series..Based on true incidents..Enjoyed very much.. Only 4 episodes, it was speed & intriguing.. And it's 🔞🔞. . 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗛𝗢𝗪𝗧𝗜𝗠𝗘

𝗕𝗟𝗔𝗖𝗞 𝗕𝗜𝗥𝗗 Season 1(𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series review

Image
  𝗕𝗟𝗔𝗖𝗞 𝗕𝗜𝗥𝗗 Season 1(𝟮𝟬𝟮𝟮-) English Mystery thriller series ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு நபர், அவர் உண்மையில் அப்படி செய்தாரா என ஆராய அதே சிறைக்கு அனுப்பப்படும் கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான மிஸ்ட்ரி த்ரில்லர் சீரிஸ்.. திரைக்கதை மிக சிறப்பாக இருந்தது, சிறைக்கு உள்ளும் வெளியும் என காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும், ஒளிப்பதிவு,பிண்ணனி இசை,எடிட்டிங் என எல்லா வகையிலும் தரமாக அமைக்கப்பட்ட தொடர்.. கதாநாயகன் மற்றும் அந்த குற்றவாளியின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Fantastic mystery thriller series.. Everything was just perfect..those two lead character performance was top notch.. Enjoyed through the series.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+

𝗞𝗔𝗧𝗛𝗔𝗟 - 𝗔 𝗝𝗮𝗰𝗸𝗳𝗿𝘂𝗶𝘁 𝗠𝘆𝘀𝘁𝗲𝗿𝘆 (𝟮𝟬𝟮𝟯) Hindi Comedy crime drama film review

Image
𝗞𝗔𝗧𝗛𝗔𝗟 - 𝗧𝗵𝗲 𝗝𝗮𝗰𝗸𝗳𝗿𝘂𝗶𝘁 𝗠𝘆𝘀𝘁𝗲𝗿𝘆 (𝟮𝟬𝟮𝟯) Hindi Comedy crime drama film எம்எல்ஏ வீட்டில் உள்ள மரத்தில் விசேஷமான பலாப்பழம் திருடு போகிறது, அதை கண்டுபிடித்து தரக் கோரி காவல்துறை அதிகாரியான கதாநாயகிக்கு உத்தரவிடப்படுகிறது.. இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தரமான படம், மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு திருடனை கண்டறியும் கதைதான் ஆனால் இது சாதி அரசியல், தீண்டாமை பற்றியெல்லாம் பேசக்கூடிய படம்.. படம் எந்த இடத்திலும் தொய்வாக இல்லை..காமெடி காட்சிகளும் சிறப்பாக இருந்தது.. கதாநாயகி சான்யா மல்கோத்ரா வின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. அனைவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்... *Superb film,, film speaks sensitive matter in humour way..Dialogues was very good..liked it very much..I'd definitely recommend this to watch with family.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗖𝗜𝗧𝗬 𝗢𝗙 𝗗𝗥𝗘𝗔𝗠𝗦 𝗦𝗲𝗮𝘀𝗼𝗻 𝟯 (𝟮𝟬𝟮𝟯-) Hindi political drama series review

Image
  𝗖𝗜𝗧𝗬 𝗢𝗙 𝗗𝗥𝗘𝗔𝗠𝗦 Season 3 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Political crime drama series கடந்த சீசனின் க்ளைமாக்ஸில் கதாநாயகி பூர்ணிமா கைக்வாட் தேர்தலில் வென்று முதல்வராகி விடுவார், ஆனால் துர்தஷ்டவசமாக குண்டு வெடித்து அவரின் மகன் இறந்து விடுவான், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. முதல் இரண்டு சீசன் அளவுக்கு இல்லாவிட்டாலும் இதுவும் ஒரு நல்ல சீசன் தான்.. சமகால அரசியலைப் பேசுவதால் நம்மால் எளிதில் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.. கடந்த சீசன்களில் பூர்ணிமா கதாபாத்திரம் ரொம்ப வலுவாக சித்தரிக்கப் பட்டிருக்கும் ஆனால் இந்த சீசனில் கொஞ்சம் சொதப்பி விட்டனர்..க்ளைமாக்ஸ் சுமாராக இருந்தது.. அரசியல் சார்ந்த படங்கள் பிடிக்கும் என்றால் இந்த தொடரும் பிடிக்கும்.. *COD is back with neat political drama.. Character development went bad,, "No struggle, easy win" Makes boring.. Otherwise it's watchable.. Liked that reporter character.. Watch it if like political dramas.. 𝐍𝐄𝐀𝐓* [ MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

𝗦𝗖𝗛𝗢𝗢𝗟 𝗢𝗙 𝗟𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Mystery thriller series review

Image
  𝗦𝗖𝗛𝗢𝗢𝗟 𝗢𝗙 𝗟𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Mystery thriller series ஊருக்கு வெளியே உள்ள ஒரு போர்டிங் ஸ்கூல், அங்கு சக்தி என்ற ஒரு சிறுவன் காணாமல் போகிறான், போலிஸ் விசாரணையை ஆரம்பிக்கிறது,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. சூப்பராக ஆரம்பித்து சுமாராக முடிந்த தொடர்..முதல் 5 Episode கள் ஓரளவுக்கு நன்றாக இருந்தது, அதற்கு பின் 😬.. க்ளைமாக்ஸில் என்ன மாதிரியான ட்விஸ்ட் இருக்க கூடாது என்று நினைத்தேனோ அதுதான் இருந்தது, அது ரொம்ப மட்டமான ட்விஸ்ட்,சிறார்கள் கூட யூகித்து விடுவார்கள், இந்த கதையை வேற மாதிரி கொண்டு போயிருக்கலாம்..பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம், நன்றாக இல்லை என்றால் என்னை திட்ட வேண்டாம்.. *Good start and slide off at the end,it was good until 5th episode.. Character writing also poor except Nandita teacher.. Didn't liked it much.. 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ MY RATINGS : 𝟲/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

𝗬𝗘𝗟𝗟𝗢𝗪𝗝𝗔𝗖𝗞𝗘𝗧𝗦 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) English Survival mystery thriller series review

Image
  𝗬𝗘𝗟𝗟𝗢𝗪𝗝𝗔𝗖𝗞𝗘𝗧𝗦 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) English Survival Mystery thriller series ஒரு கால்பந்து அணி சென்ற விமானம் விபத்திற்குள்ளாகி ஒரு ஆள் அரவமற்ற காட்டிற்குள் விழுகிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான சர்வைவல் த்ரில்லர்..கதை இரண்டு காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படும்,எந்த இடத்திலும் குழப்பம் ஏற்படாமலும் தொய்வில்லாமலும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.. கடந்த சீசனில் இருந்து இந்த சீசனின் கதாபாத்திர மெருகேற்றம் சிறப்பாக இருந்தது.. சுவாரஸ்யம் முதல் சீசனை விட கம்மி தான், காரணம் முதல் சீசனை எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தது தான்.. த்ரில்லர் ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய தொடர்.. *Yellowjackets is back with another stellar season..stunned how the mysteries unfold one by one..Entertainment wise Yellowjackets >>>.. Loved every characters & performances.. I'd definitely recommend this to watch.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔

𝗔𝗦𝗨𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime thriller series review

Image
  𝗔𝗦𝗨𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟯-) Hindi crime thriller series வரிசைக்கு கொலைகள் செய்து அசுரன் முகமூடியை குறியீடாக விட்டு செல்லும் கொலைகாரன், அவனை காவல்துறை கண்டுபிடித்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் சீரிஸ்..இதற்கும் மற்ற க்ரைம் சீரிஸிற்கும் என்ன வித்தியாசம் என்றால் இதில் பழைய புராணக் கதைகள் கிளை கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது..கடந்த சீசன் போலவே இந்த சீசனும் சிறப்பாக இருந்தது.. திரைக்கதை தரமாக அமைக்கப்பட்டதன் காரணமாக விறுவிறுப்பாக இருந்தது.. அசுர் கதாப்பாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருந்தது.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Outstanding season for Asur..Amazed with screenplay & making.. Casting & performance was top notch, especially Asur character..loved this series.. Waiting for Season 3.. I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇+* [ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗝𝗜𝗢 𝗖𝗜𝗡𝗘𝗠𝗔