Posts

Showing posts from January, 2023

𝗔𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 𝗛𝗘𝗥𝗢 (𝟮𝟬𝟮𝟮) Hindi Action thriller film review

Image
  𝗔𝗡 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡 𝗛𝗘𝗥𝗢 (𝟮𝟬𝟮𝟮) Hindi Action thriller film கதாநாயகன் ஒரு மிகப்பெரிய சினிமா ஸ்டார், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் கவுன்சிலர் தம்பி, அவர்கள் இருவர் நடுவில் நடந்த தள்ளுமுள்ளுவில் கவுன்சிலர் தம்பி கீழே விழுந்து இறந்து போகிறார், கதாநாயகன் லண்டனுக்கு தப்பி ஓட அவரை பழிவாங்க வேண்டும் என்று கவுன்சிலரும் லண்டன் செல்கிறார், இவர்கள் இருவருக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இப்படத்தின் கதை.. சிறப்பான ஒரு ஆக்ஷன் த்ரில்லர்.. ட்ரைலர் ரொம்ப சுமாராக இருந்தாலும் படம் அதற்கு எதிர்மாறாக சிறப்பாக இருந்தது... ஆயுஷ்மான் குரானா கேரியரில் இன்னொரு நல்ல படம் இது.. ஆக்ஷன் காட்சிகள் தரம் 💯 இரண்டு மூன்று சேஸிங் காட்சிகள் வேற லெவலில் இருந்தது.. இப்படத்தின் குறையாக பட்டது முதல் பாதி ரொம்ப வேகமாக இருந்தது ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வாக இருந்தது.. ஆக்ஷன் த்ரில்லர் ஒரு முறை பார்க்கலாம்..*Neat racy action thriller.. Never doubt Ayushman kurana ✌️.. Couple of chasing scenes were extremely good..little lag in 2nd half but it's okay.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS :

𝗔𝗬𝗔𝗟𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Revolutionary drama series review

Image
  𝗔𝗬𝗔𝗟𝗜 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Revolutionary drama series பெண்கள் வயசுக்கு வந்து விட்டால் படிக்க கூடாது, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடோடு இருக்கும் ஒரு கிராமம், அந்த கிராமத்தில் படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படும் கதாநாயகி, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்.. இது போன்ற கதையை எடுத்து படமாக்குவதற்கே தனி தைரியம் வேண்டும், அதை செய்த இந்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.. தரமான கதையாக மட்டும் அல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த தரமான தொடர்.. காட்சிகள் மற்றும் வசனங்கள் மிகவும் வலுவாக இருந்தது.. தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் நடிப்பும் ரொம்ப சிறப்பாக இருந்தது.. விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய தொடர்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.. *Tamil starts with the BEST product of the year.. An amazing revolutionary series with commercial elements.. I'm surprised and everybody will be surprised too..congratulations to the team for giving excellent series.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ MY RATI

𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 3 (𝟮𝟬𝟭𝟱-) English action crime thriller series review

Image
  𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 3 (𝟮𝟬𝟭𝟱-) English action crime thriller series கதாநாயகன் ஷெரீஃப் ஹூட் ஒரு  ராணுவ தளத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார், அதே வேளையில் சேய்ட்டன் தன் இனத்தின் பிரதிநிதியை கொன்ற ப்ராக்டரை பழிவாங்க நினைக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த சீசனின் கதை.. கடந்த இரண்டு சீசன் போலவே இதுவும் தரமாக இருந்தது.. காட்சிக்கு காட்சி பரபரப்பாக இருந்தது..ஒரு சில கதாப்பாத்திரங் களின் வடிவமைப்பு மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.. சுகர் மற்றும் ஜாப் இடையிலான காட்சிகள் 💖💯 போலீஸ் நிலையம் அட்டாக்கிங் சீன் வேற லெவல் 💯 ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.. *Excellent season like previous two.. Loved every bit of the series.. Likable on Lucas Hood & Proctor is increased in this season.. Lots of sexual and violence content is there so strictly not for family.. 𝐖𝐎𝐑𝐓𝐇 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB Ratings : 8.4/10 & My Ratings : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘 & 𝗛𝗨𝗟𝗨

𝗠𝟯𝗚𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) English Sci-fi horror thriller film review

Image
  𝗠𝟯𝗚𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟯) English Sci-fi horror thriller film கதாநாயகி ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவரது சகோதரி ஒரு விபத்தில் இறந்துபோக அவரின் மகளை தான் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது, அந்த சிறுமிக்காக மேகன் என்ற ரோபோட்டை தயாரிக்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. பெரிய அளவில் பயமுறுத்தாத ஆனாலும் ஒரு பார்க்க கூடிய படமாக அமைந்தது இந்த மேகன்..படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கும் தொய்வில்லாமல் நகர்கிறது..அந்த மேகன் என்ற பொம்மையின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பாக இருந்தது..இந்த படத்தின் மிகப்பெரிய குறையே இது ஒரு பேய் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது தான்..ஒரு பேய் படத்தை எதற்கு பார்க்கிறோம்? ஒருவித பயத்தையும் பதட்டத்தையும் அனுபவிக்க தானே,அப்படிப்பட்ட பயமும் பதட்டமும் கொஞ்சம் கூட இந்த படத்தில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்..*A plain sci-fi horror which makes no fear.. M3gan failed to make us to say "Wow, awesome, scary etc".. Just Ended up odd horror film.. Maybe kids will enjoy th

𝗧𝗛𝗘 𝗚𝗟𝗢𝗥𝗬 Part 1 (𝟮𝟬𝟮𝟮-) Korean Revenge thriller series

Image
  𝗧𝗛𝗘 𝗚𝗟𝗢𝗥𝗬 Part 1 (𝟮𝟬𝟮𝟮-) Korean Revenge thriller series கதாநாயகியின் பள்ளிப்பருவத்தில் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்திய சில நபர்களை பழிவாங்க வேண்டும் என்று கதாநாயகி முடிவெடுக்கிறார், இவர் நினைத்தபடி பழிவாங்கினாரா என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான ஒரு தொடர்.. காயப்பட்ட ஒருவரின் வலிகளை நமக்குள் கடத்திய ஒரு நல்ல தொடர்.. சிலரின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, குறிப்பாக கதாநாயகி , வேற லெவலில் எழுதப்பட்ட கதாபாத்திரம், ஒருசில இடங்களில் அவரின் செயல்கள் புல்லரிக்க வைக்கிறது.. மற்ற எதிர்மறை கதாபாத்திரங்களை கண்டு நமக்கு கோபம் வருகிறது, அங்குதான் அந்த கதாபாத்திரங்கள் வெற்றியடைகிறது... இது போன்று துன்புறுத்தப்பட்ட நபர்களின் திருப்பி அடிக்கும் பிரதிநிதியாக கதாநாயகி ஜொலிக்கிறார்,. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Excellent series with lot of pain & revenge.. Heroine char giving goosebumps in many scenes..even I blew whistle in some scenes🤪 "It's time to give it back mame" Quote apt to that heroine character.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [

𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) English Mystery thriller series

Image
  𝗢𝗡𝗘 𝗢𝗙 𝗨𝗦 𝗟𝗬𝗜𝗡𝗚 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) English mystery thriller series சைமன் என்கிற ஒரு மாணவன் மர்மமான முறையில் கொல்லப்பட, அவருடன் அப்போது இருந்த நான்கு நபர்கள் தான் கொலையாளி என போலீஸ் சந்தேகப்படுகிறது, அவர்களில் யார் சைமனை கொலை செய்தது, அதற்கான காரணம் என்ன என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான மிஸ்ட்ரி / சஸ்பென்ஸ் த்ரில்லர்.. 13 ரீசன்ஸ் ஒய்,எலைட், ஹூ கில்டு சாரா போன்ற சீரிஸின் வரிசையில் இதுவும் ஒரு நல்ல தொடர்.. நொடிக்கு நொடி சுவாரஸ்யமாக இருந்தது, அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது.. க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் / டீன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *An amazing mystery thriller with teen drama element.. Screenplay is really good..odd story with fresh execution makes unique this one..some of the twists is 💥..don't consider IMDB ratings, trust me & go for it..& 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 6.8/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗗𝗝 𝗧𝗜𝗟𝗟𝗨 (𝟮𝟬𝟮𝟮) Telugu Romantic comedy thriller film

Image
  𝗗𝗝 𝗧𝗜𝗟𝗟𝗨 (𝟮𝟬𝟮𝟮) Telugu Romantic comedy thriller film வேலை எதுவும் செய்யாமல் ஊரை சுற்றும் கதாநாயகன் ஒரு பெண் மீது காதல் வயப்படுகிறார், அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலனும் இருக்கிறான், கதாநாயகி க்கும் அவனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் சுவற்றில் தள்ளிவிட அவன் இறந்து போகிறான், அவனது சடலத்தை எப்படி கதாநாயகன் மற்றும் கதாநாயகி மறுக்கின்றனர், அதனால் வரும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதை.. ஓரளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு நல்ல படம்.. கதை சுமாராக இருந்தாலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகர்ந்தது.. கதாநாயகனின் கதாபாத்திர வடிவமைப்பு சிறப்பு.. அவருடைய நடிப்பில் நவீன் பாலிஷெட்டி அவர்களின் சாயல் அப்பட்டமாக தெரிகிறது..அவருடைய வேகமாக வசனங்கள் ஒரு சில நேரங்களில் எரிச்சலை ஊட்டுகிறது என்பதையும் மறுக்க முடியாது.. பொழுது போகவில்லை என்றால் ஒரு முறை பார்க்கலாம்.. Neat new age rom-com film.. No boring scenes.. Commercial audience may like this film much.. 𝐓𝐈𝐌𝐄𝐏𝐀𝐒𝐒 𝐎𝐍𝐄 [ IMDB : 7.2/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔

𝗔𝗟𝗖𝗛𝗘𝗠𝗜𝗦𝗧 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) Korean Romantic comedy series

Image
  𝗔𝗟𝗖𝗛𝗘𝗠𝗜𝗦𝗧 Season 1 (𝟮𝟬𝟭𝟱-) Korean Romantic comedy series கதாநாயகிக்கு ஒரு பையன் மீது காதல் ஏற்படுகிறது, அதற்காக அந்த பையன் நடத்தும் ஆல்கெமிஸ்ட் க்ளப்பில் சேர்கிறார், ஆல்கெமிஸ்ட் க்ளப் என்பது காதலை வெறுத்துப் போன, காதலுக்கு எதிரான ஒரு க்ளப், அந்த க்ளப்பில் சேர்ந்து கதாநாயகி படும் அவஸ்தை தான் இத்தொடரின் கதை.. கலகலப்பான ஒரு காதல் தொடர்.. 12 Episode களை உள்ளடக்கிய இந்த தொடரில் ஒவ்வொரு Episode வும் சுமார் 15 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது, நேரம் போவதே தெரியாது, நேரம் கிடைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *Good & short Kdrama, Loved this one.. Try it if you have plenty of time.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗞𝗜𝗥𝗜

𝗢𝗨𝗥 𝗧𝗜𝗠𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟱) Taiwanese romantic comedy film

Image
  𝗢𝗨𝗥 𝗧𝗜𝗠𝗘𝗦 (𝟮𝟬𝟭𝟱) Taiwanese Romantic comedy film ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் கதாநாயகி டரூலி லின் தனது பள்ளிப் பருவ காதல் மற்றும் நட்பை நினைவு கூறுவது தான் இப்படத்தின் கதை.. மனதை நெகிழ வைக்கக்கூடிய ஒரு அட்டகாசமான காதல் திரைப்படம்.. ஒரு காதல் படம் எங்கு ஜெயிக்கும் என்றால் அப்படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி சேர்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் தோன்ற செய்யும் போதுதான், அப்படி ஒரு எண்ணத்தை இப்படம் கொடுத்தது.. நிறைய கலகலப்பான காட்சிகளையும் தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைந்த காதல் திரைப்படம்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Beautiful heartwarming romantic comedy film from Taiwanese film industry.. Enjoyed every bit of the film.. That two primary char's chemistry is just beautiful and hilarious.. I'd definitely recommend this to watch with family.. 𝐌𝐔𝐒𝐓 𝐖𝐀𝐓𝐂𝐇* [ IMDB RATINGS : 7.4/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗔𝗗𝗨𝗟𝗧 𝗧𝗥𝗔𝗜𝗡𝗘𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean romantic comedy series

Image
  𝗔𝗗𝗨𝗟𝗧 𝗧𝗥𝗔𝗜𝗡𝗘𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Korean Romantic comedy series ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 3 காதல் கதைகளை உள்ளடக்கிய தொடர்தான் இது.. முதல் கதை கொஞ்சம் சுமாராக இருந்தாலும் மீதி இரண்டு கதைகள் சிறப்பாக இருந்தது.. முதல் கதை சுமாராக இருப்பதன் காரணம் அதன் கான்செப்ட்டே தவறானதாகும்... காதலுக்கான காரணங்கள் வித்தியாசமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.. மூன்றாவது கதையை காட்டிலும் இரண்டாவது கதை மிக சிறப்பாக இருந்தது, 3 வது கதையை வேறு மாதிரி வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், கொரியன் ட்ராமாக்களில் லெஸ்பியன் காட்சிகள் இடம்பெற்றால் தவறா என்ன?!.. கொரியன் ட்ராமாக்கள் அதிகம் பார்க்கும் நபர்களுக்கு பிடிக்கும்.. *a K drama that speaks about love ( it's usual but here they talk about dark desiry love).. If you like k dramas, you may like this too.. 𝐓𝐈𝐌𝐄 𝐏𝐀𝐒𝐒 𝐎𝐍𝐄* [ IMDB RATINGS : 7/10 & MY RATINGS : 𝟳.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗕𝗜𝗟𝗜𝗕𝗜𝗟𝗜

𝗧𝗛𝗘 𝗠𝗜𝗥𝗥𝗢𝗥 𝗖𝗥𝗔𝗖𝗞'𝗗 𝗙𝗥𝗢𝗠 𝗦𝗜𝗗𝗘 𝗕𝗬 𝗦𝗜𝗗𝗘 (𝟮𝟬𝟭𝟴) Japanese Television crime investigation thriller film

Image
  𝗧𝗛𝗘 𝗠𝗜𝗥𝗥𝗢𝗥 𝗖𝗥𝗔𝗖𝗞'𝗗 𝗙𝗥𝗢𝗠 𝗦𝗜𝗗𝗘 𝗧𝗢 𝗦𝗜𝗗𝗘 (𝟮𝟬𝟭𝟴) JAPANESE Television Crime investigation thriller film  இரிடோகி மடோகா சான் என்ற புகழ்பெற்ற நடிகை 13 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார், அதன் முன்னோட்டமாக மேன்சன் ஒன்றை வாங்கி மிகப்பெரிய பார்ட்டி வைக்கிறார், பார்ட்டிக்கு வந்த விருந்தினர் ஒருவர் கொல்லப்படுகிறார், அந்த கொலையை யார் செய்தது? அதற்கான காரணம் என்ன என்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தார்களா என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான படம்.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து வியந்த ஒரு படம்... இந்த படம் அகத்தா கிரிஸ்டி அவர்களின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. ரொம்ப சுவாரஸ்யமான படம், அடுத்தடுத்து எக்கச்சக்க ட்விஸ்ட்கள் இருந்தது.. த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..  *Superb crime Investigation thriller with hood'n'nick concept..this film is back on Agatha Christy's famous novel.. Twists from later part was very nice especially climax 🥵💯 Definitely 𝐖𝐎𝐑𝐓

𝗧𝗛𝗘 𝗖𝗢𝗙𝗙𝗜𝗡 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗨𝗡𝗧𝗔𝗜𝗡 (𝟮𝟬𝟭𝟰) Chinese Mystery thriller film

Image
  𝗧𝗛𝗘 𝗖𝗢𝗙𝗙𝗜𝗡 𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗠𝗢𝗨𝗡𝗧𝗔𝗜𝗡 (𝟮𝟬𝟭𝟰) Chinese Mystery thriller Film ஒரு சிறிய கிராமம், அங்கு எரிந்த நிலையில் கிடக்கும் சடலம், அந்த கிராமத்தில் நடக்கும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்பில்லாத சில சம்பவங்கள் எப்படி அந்த சடலத்தோடு தொடர்பு படுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் படம்.. இப்படத்தின் திரைக்கதை மற்றும் எடிட்டிங் வேற ரகம் 💯 குறிப்பாக எடிட்டிங்.. முதல் முக்கால் மணிநேரம் கொஞ்சம் குழப்பமாக இருக்கும், அதன் பிறகு எடிட்டர் ஒவ்வொரு புள்ளிகளையும் நேர்மையாக இணைத்த விதம் பிரமிக்க வைத்தது... அடுத்தடுத்து நிறைய ட்விஸ்ட்கள் இருந்தது.. மிஸ்ட்ரி த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் என எல்லா வகையான த்ரில்லர் ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும்.. *Fantastic mystery thriller with mind blowing editing.. The way editor connect all the dots is world class stuff.. Really loved this film.. Pretty sure you all will like this film... 𝐖𝐎𝐑𝐓𝐇*  IMDB RATINGS : 7.7/10 & MY RATINGS : 𝟴.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗬𝗢𝗨𝗧𝗨𝗕𝗘

𝗠𝗨𝗞𝗨𝗡𝗗𝗔𝗡 𝗨𝗡𝗡𝗜 𝗔𝗦𝗦𝗢𝗖𝗜𝗔𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy legal drama Film

Image
  𝗠𝗨𝗞𝗨𝗡𝗗𝗔𝗡 𝗨𝗡𝗡𝗜 𝗔𝗦𝗦𝗢𝗖𝗜𝗔𝗧𝗘𝗦 (𝟮𝟬𝟮𝟮) Malayalam Comedy legal drama Film திறமைகள் அதிகம் இருந்தும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருக்கும் வக்கீலான கதாநாயகன், ஒருகட்டத்தில் ஹாஸ்பிடல் வரும் நோயாளிகளுக்கு பொய்யான இன்சூரன்ஸ் பணம் வாங்கித் தரும் வக்கீலாக மாறுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அட்டகாசமான ஒரு திரைப்படம்.. இந்த கதை மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சுமாராக தெரியும்..ஆனால் இந்த கதையை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் சுவாரஸ்யமாக எடுத்துள்ளனர்.. கதாநாயகன் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு வேற லெவல்.. ரொம்ப சுயநலமாக யோசிக்க கூடிய புத்திசாலி வக்கீல் கதாபாத்திரத்தில் வினித் சிறப்பாக நடித்துள்ளார், குறிப்பு : அவர்தான் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஹிரிதயம் படத்தின் இயக்குனர்.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.. *Very interesting film with depthy protagonist char designing.. Never seen a legal drama like this before..comedies also worked very well..Loved this film.. I'd say go for it.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.1/10 & MY RATINGS : 𝟴

𝗞𝗔𝗟𝗘𝗜𝗗𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Heist thriller series

Image
  𝗞𝗔𝗟𝗘𝗜𝗗𝗢𝗦𝗖𝗢𝗣𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Heist thriller series ஒரு மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது, கொள்ளை நடப்பதற்கு முன் என்ன நடந்தது? நடந்ததற்கு பின் என்ன நடந்தது? கொள்ளை நடப்பதற்கான காரணம் என்ன? என்பதை விவரிப்பது தான் இத்தொடரின் கதை.. இது ஒரு சாதாரண ஹெய்ஸ்ட் த்ரில்லர் தான், ஆனால் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சீரிஸை எந்த Episode ஐ வேண்டுமானாலும் முதலில் பார்க்கலாம், நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி பார்க்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் பாருங்கள் ஆனால் "White" என்ற Episode ஐ மட்டும் கடைசியாக பாருங்கள், அந்த Episode தான் ஹெய்ஸ்ட், அதில் ஒரு ட்விஸ்ட்டும் இருக்கிறது.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Neat heist thriller with special feature, you can watch in chronical order..but "white" Should be last.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ IMDB RATINGS : 6.9/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗪𝗘𝗗𝗡𝗘𝗦𝗗𝗔𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Fantasy Mystery thriller series

Image
  𝗪𝗘𝗗𝗡𝗘𝗦𝗗𝗔𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟮-) English Fantasy mystery thriller series ஆடெம்ஸ் குடும்பத்தின் வாரிசான வெட்னஸ்டேவின் சேட்டைகள் தாங்க முடியாமல் அவரது குடும்பத்தினர் நெவர்மோர் என்ற பள்ளியில் சேர்க்கின்றனர், அங்கு சென்ற இவருக்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது, அது என்ன சம்பவம்? ஏன் நடக்கிறது? யார் செய்கிறது? என்பதையெல்லாம் வெட்னஸ்டே கண்டுபிடித்தாரா என்பதுதான் இத்தொடரின் கதை.. செம்மையான ஒரு ஃபேன்டசி தொடர்.. ஸ்ரேன்சர் திங்ஸ் க்கு பிறகு மிகவும் ரசித்து பார்த்த ஃபேன்டசி டீன் ட்ராமா.. வெட்னஸ்டே கதாபாத்திரத்தின் நடிப்பு மிகவும் சிறப்பு, சீரிஸ் முழுவதும் ஒரே மாதிரியான முக பாவனை தான், ஆனாலும் அதை சிறப்பாக செய்துள்ளார்.. ஈனித் சிங்லையர் & திங் கதாபாத்திரங்கள் மிகவும் பிடித்தமான தாக இருந்தது.. கண்டிப்பாக அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்..  *Yeah I'm late but it's Very interesting & engaging fantasy series from Netflix after ST.. Really enjoyed it.. Can't wait for next season.. 𝐖𝐎𝐑𝐓𝐇*  [ IMDB RATINGS : 8.3/10 & MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜

𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 2 (𝟮𝟬𝟭𝟰-) English Action crime thriller series

Image
  𝗕𝗔𝗡𝗦𝗛𝗘𝗘 Season 2 (𝟮𝟬𝟭𝟰-) English Action Crime thriller series கடந்த சீசனின் இறுதியில்  ராபிட்டிடம் இருந்து லூகஸ் ஹூட் காப்பாற்றப்படுவார், ராபிட் ஒரு சில புல்லட் காயங்களுடன்  தப்பி விடுவார், பான்ஷி நகரம் FBI ன் கட்டுப்பாட்டில் வந்துவிடும், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. முதல் சீசன் போலவே இதுவும் அட்டகாசமாக இருந்தது.. முதல் சீசனை காட்டிலும் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக இருந்தது.. ஆக்சன் காட்சிகள் தரம் 💯 ப்ராக்டர் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது, எனக்கு மிகவும் பிடித்த மாறிவிட்டது.. ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய தொடர்.. *Fantastic action crime thriller series, hooked me up until the end very well.. Became a fan of this series very quickly.. Heavy violence & sexual content 🔞🔞is there,.. 𝐖𝐎𝐑𝐓𝐇 𝐈𝐍 𝐄𝐕𝐄𝐑𝐘 𝐀𝐒𝐏𝐄𝐂𝐓* [ IMDB RATINGS : 8.3/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

𝗗𝗘𝗖𝗜𝗦𝗜𝗢𝗡 𝗧𝗢 𝗟𝗘𝗔𝗩𝗘 (𝟮𝟬𝟮𝟮) Korean romantic mystery thriller film

Image
  𝗗𝗘𝗖𝗜𝗦𝗜𝗢𝗡 𝗧𝗢 𝗟𝗘𝗔𝗩𝗘 (𝟮𝟬𝟮𝟮) Korean Romantic Mystery Thriller Film ஒரு மலைப்பகுதியில் ஒருவர் கொள்ளப்பட்டு கிடக்கிறார், அவர் கொன்றது அவரது மனைவிதான் என்று அவரை வேவு பார்க்கும் கதாநாயகன், வேவு பார்க்கும் வேலையில் அவள் மீது கதாநாயகனுக்கு காதலும் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. மெதுவாக நகர கூடிய ஒரு நல்ல மிஸ்ட்ரி த்ரில்லர் படம்..இது பார்க் சான் வூக் அவர்களின் படம், அவர் இதற்கு முன் எடுத்து ஓல்டு பாய் & ஹான்ட்மைடன் மிகவும் பிரபலமான படங்கள், அந்த படங்களில் மிரட்டலாக ட்விஸ்ட்டை வைத்திருப்பார்.. அப்படி ஒரு ட்விஸ்ட் இப்படத்தில் இல்லை.. எதிர்பார்த்து ஏமாற்றப்பட்டேன் 🙂.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரின் நடிப்பு அட்டகாசம்..ஓல்டு பாய் இயக்குனரின் படம் என்று மிக ஆர்வத்தில் பார்க்க வேண்டாம், பொறுமையாக பார்க்க வேண்டிய படம்.. *Neat Slow burning romantic mystery thriller (actually its pure romantic film with mystery element 😅)..screenplay is complicated..That lead actress is so beautiful..her eyes convey the emotions 👏I'd say go for it if

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

Image
  𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series நிஜ உலகத்திலிருந்து மாயமாகி வேறு ஒரு உலகத்திற்குள் மாட்டிக் கொள்ளும் கதாநாயகன் மற்றும் நிறைய மக்கள், ஒரு சில கேம்ஸ் விளையாடி வென்றால் தான் உயிரோடு திரும்ப முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரில் கதை.. கடந்த சீசன் எந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோ அதே அளவுக்கு தான் இந்த சீசனும் இருந்தது.. நிறைய கேம்கள் சுவாரஸ்யமாக இருந்தது.. கதாநாயகன் அரிசு மற்றும் கதாநாயகி உசாகி கதாபாத்திரங்களைத் தாண்டி ஜிஸியோ கதாபாத்திரத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது, தலைவன் வேற ரகம் ⚡💯.. இந்த சீரிஸின் குறையாக பட்டது இவர்கள் எப்படி அந்த உலகத்திற்கு சென்றார்கள் என்பதற்கான விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை.. இது ஸ்க்விடு கேம் சீரிஸ்யை விட சிறப்பாக இருக்கும்.. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Superb series, this one begins where 1st season ends, so no jumping... AIB >>> squid game..🔞...Chisiyo character🔥🥵 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.4/10 & MY RATINGS :

𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟬-) English Action thriller series

Image
  𝗪𝗔𝗥𝗥𝗜𝗢𝗥 Season 2 (𝟮𝟬𝟮𝟬-) English Action thriller series கடந்த சீசனின் இறுதியில் கதாநாயகன் லாங்ஸியுடன் மோதி தோற்றுப் போவார், அதன் பிறகு சைனாடவுன் லாங்ஸியின் கட்டுக்குள் வந்துவிடும், இதன் பிறகு கதாநாயகன் மற்றும் அவரது படையான ஹாப் வெய் மீண்டு எழுந்தார்களா? என்பதுதான் இந்த சீசனின் கதை.. அட்டகாசமான  அதிரடி ஆக்சன் தொடர்.. கடந்த சீசன் போலவே இந்த சீசனும் சிறப்பாக இருந்தது.. சண்டைக் காட்சிகள் வேற ரகத்தில் இருந்தது.. குறிப்பாக 9 ஆவது Episode ல் வரும் கலவரம் மற்றும் அதில் கதாநாயகனின் ஆக்சன் காட்சிகள் தரம் 💯 இந்த கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டு சீசனிலும் ஒரு Episode உள்ளது, அது மிகவும் சிறப்பாக இருக்கும்.. ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒரு தொடர்.. *Fantastic action thriller series.. Everything was perfect in this season but they ruined Penelope Black's character, I loved their romantic portion in first season.. Hope they will reunit them in S3..🔞🔞..  Marana waiting for season 3 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB RATINGS : 8.4/10 & MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜